பக்கம்:அவள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

லிருந்து இறங்கினதும், மூட்டை முடிச்சுக்களையும் மற்ற வரையும் மாட்டு வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, என்னை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு வந்ததும் நேரே அம்மன் சன்னதிக்குச் சென்றோம். மாலை மணி நாலு இருக்கலாம்; இன்னும் கூட்டம் சேரவில்லை. சன்னதியில் நாங்கள் இருவர் மட்டுமே.

"ராமாமிருதம், லால்குடியில் நமக்கு இருக்கும் சொத்தே இவள்தாண்டா!" அண்ணா அப்படிச் சொன்ன போது எனக்குக் கொஞ்சம் வேடிக்கையாயிருந்தது. ஆனால் அண்ணா ஏன் கண் கலங்கறார்? ஏன் குரல் தழு தழுக்கிறது? பெருந்திருவின் முதல் தரிசனம் எனக்கு அன்றுதான்... அவளைப் பார்த்து எனக்குத் தோன்றிய முதல் எண்ணம்! வருஷக்கணக்கில் இப்படியே நின்னுண்டிருக்காளே! இவளுக்குக் கால் வலிக்காதா?

"நம் சொத்தே இவள்தாண்டா!"

கேட்டு வருடங்கள் எழுபதுக்கு மேலாச்சு. ஆனால் நெருப்பில் எழுதியதாய் வாக்கியம் இன்னும் நெஞ்சில் கனிந்துகொண்டிருக்கிறது.

***

குழந்தை குடுகுடென ஓடிவருகிறாள் என்னைப் பிடித்துக்கொண்டு மேடைமீது ஏறுகிறாள்.

"தாத்தா பக்கத்துலே தாச்சுக்கணும்!".

இருவருக்கும் மேடையில் இடம் காணாது. ஒருக்களித்து, ராணிக்கு எப்படியோ இடம் விடுகிறேன்.

"தாத்தா போத்திவிடு."

ஏற்கெனவே மின்சாரம் அம்பேல், புழுங்கித்தள்ளுகிறது. ஆனால் கேட்கமாட்டாள். என் சவுக்கத்தை அவள்மேல் போர்த்துகிறேன்.

"நீயும் போத்திக்கோ."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/10&oldid=1495886" இலிருந்து மீள்விக்கப்பட்டது