என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு
இப்படி ஆரம்பிக்கையிலேயே பாஸ்கர், எனக்கு உடம்பை என்னவோ பிய்த்துப் பிடுங்குகிறது, ஆனால் வேணும் என்றேதான். இருக்கட்டும். இந்தக் கடிதம் உனக்கு 'ஷாக்'காக இருக்கலாம். ஆனால் எனக்கு இதுவே பிராயச்சித்தமாக இருக்கக்கூடும் என்பதனால்தான் நம் சினேகத்தின்பேரில் பாரம்.
"ஆமாம், இன்றிரவு பன்னிரண்டு வரை கடற்கரையில், அலையோரம் படகடியில், அனு, நீ, நான் அரட்டை அடித்துவிட்டு, இதென்ன கடிதம் வேண்டிக் கிடக்கிறது?’’ என்று நீ வியப்புறுவது நியாயமே. இன்று நான் மறக்க முடியாத என் மிக்க மிக்கச் சந்தோஷ நாள். இன்று அனு, Simply scintillating பேச்சில், தோற்றத்தில், கண்களின் ஒளியில், என்ன ஜாஜ்வல்யம்! என் பரவசம் அதன் கவானின் உச்சியைத் தொட்டுவிட்டது, எனக்கே தெரிந்து விட்டது.
நான் ஸஸ்பென்ஸை வெறுப்பவன். It is cheap, vulgar, silly, artificial.
என் பிரியமுள்ள சினேகிதனே, I love your wife. இதை நான் நேரிடையாக உன்னிடம் சொல்ல முடியுமா, நீயே சொல்.