பக்கம்:அவள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

71

படித்தான் நடந்துகொண்டிருந்தது. தன் கையாலேயே தாத்தாவுக்குப் பணிவிடைகள் உள்பட, ஆனால் அன்று எட்டாம் நாள் வெள்ளிக்கிழமை, தை, பகுளபஞ்சமி தினத்தன்று, விடியற்காலை வேளையில் பாட்டி, இந்த உலகத்தை நீத்தாள். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து, தாத்தாவின் உயிரும் பிரிந்தது.

ஒரே சிதையில் தகனம். விஷயம் காட்டுத் தீயாகப் பரவி, ஊரும், சுற்றுவட்டாரமும் சமுத்ரம் புரண்டு, மயானம் கொள்ளல்லே. தேர்த்திருவிழா மாதிரி ‘ஜேஜே’. அந்தப் பேச்சு ஆறு மாசத்துக்கு. அதன் தஹிப்பு தணியல்லே. வீடு யாத்திரை ஸ்தலாமாப் போச்சு.

இந்த விசுப்பலகையா, இதன் அடியிலா, இங்கேயா?” நமஸ்காரம் பண்ணி, கொண்டுவந்த தேங்காயை உடைத்து, வெற்றிலைப்பாக்கு மஞ்சளோடு மடியில் கட்டிக்கொண்டு, தொழுதுவிட்டுப்போன பெண்டிர் எத்தனைபேர்? அந்தக் காலம், சொன்னாலும் இப்ப நம்புவாளா?

“என் பாட்டி இருந்தாளே—அல்லது இருக்காளேயா? எதைச் சொல்றது? பொல்லாத பாட்டி. மஞ்சள் குங்குமத்தோடுதான் முந்திண்டுடனும்னு ஒரே எண்ணம், ஒரே சித்தத்தில், she simply willed her death into coming. இந்த நாளில் இது நடந்ததுன்னா, அந்த நாளில் ஒருத்தி, புருஷன் உயிரை யமனிடமிருந்து பிடுங்கிண்டு வந்தாள். ஒருத்தி தனக்குப் புருஷன் தக்கணும்னு உலகத்துக்கே விடியாம இருக்க அடிச்சுட்டான்னா ஏன், நடந்திருக்காது? ஏன் நம்பக்கூடாது? ஆயிரம் காலேஜ் குமாரியானாலும் நான் நாட்டுப்புறம்தானே! சிரித்தாள், கொல்லும் சிரிப்பு. “போனவா போனாலும் இருக்கறவா இருக்கத்தானே இருக்கா, எல்லாம் உடன்கட்டை ஏறிடறாளா?” என்று என்னதான் பகுத்தறிவுவாதம் பண்ணினாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/115&oldid=1496906" இலிருந்து மீள்விக்கப்பட்டது