பக்கம்:அவள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

78

எழுதி எழுதிக் கை வலிக்கிறது. கொஞ்சம் off.

அறைக்கு வெளியே மொட்டை மாடிக்கு வந்தான். புகையை இழுத்து மார்புள் தங்கவைத்து, கொஞ்சங் கொஞ்சமா ‘புக் புக்’ வெளியே விட்டதும், அம்மாடி! என்ன சுகம்! வேறு சமயம் இந்நேரத்துக்கு ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும். எழுதுவதே ஒரு discipline போல இருக்கே! ...

அற்புதமான இரவு, எட்டித் தொட்டுவிடலாம் போல் வான்கவானில், ஒரு பூப்பாரம் கட்டவிழ்ந்து சரிந்தது போல், ஒரே நக்ஷத்ரக் கொள்ளை. லேசான ஒரு ‘கம்’ கூட. உண்மையிலா. அல்லது மனம் மனதை ஏமாற்றா?

இந்த நக்ஷத்ரங்களில் எது எனது? இருபத்தி ஏழு அற்ற மற்றதெல்லாம் அநாமி—நானும் ஒரு அநாமி. பின் இதுவரை என்ன சாதித்தேன்? புஸ் புஸ் புஸ்—களிமண் பட்டாஸ். நான் செத்தால் எனக்காக அழ, அச்சாரம் கொடுத்து, அமர்த்தியாகணும், என்ன தமாஷ்!

இந்த ப்ரம்மாண்டமான தேன்கூடில், என்னைப் பெற்றவர்கள் எங்கிருப்பார்கள்? எனக்காகக் காத்துக் கொண்டிருப்பார்களா? அல்லது மீண்டும் தங்கள் தனித்தனிப் பிறவிகளையெடுத்துத் தங்கள் தங்கள் தேன்களைத் தேடிக்கொண்டிருப்பார்களா? அங்கு போயும் என் தனிமையின் குளிரில் வெடவெடத்துக் கொண்டு, அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கணுமா?

அனுவின் பாட்டியும் தாத்தாவும்—No. தங்கள் வளையில் பத்திரமாக, கதகதப்பாக, அடக்கமாக அடங்கி யிருப்பார்கள். அவர்கள் இனி தேன் தேட வேண்டாம்.

அனு—அவள் Queen Bee. அவளுக்கே தெரியும். தெரியுமோன்னோ? ஆனால் அனுபற்றி எதுவும் சொல்ல முடியாது. எப்படியிருந்தால் என்ன, என்னைக் கொட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/117&oldid=1496910" இலிருந்து மீள்விக்கப்பட்டது