என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 77
Damn her/ மிதந்து செல்லும் பனிமலையில் தெரிவது அதன் நுனிதான். மலையின் உயரமும் அகலமும் கடல் ஆழத்தில் எம்மட்டோ? அப்பத்தான் குளித்தமாதிரி, ஒரு fresiness அவளிடம் திகழ்ந்தது.
The Queen Bee.
உட்காருங்கள். திவாகர் எந்நேரம் நிற்பீர்கள்? Coffee? Tea?”
அவள் சமையலறைக்குப் போனாள். உன்னைப் பார்த்தேன். நீ, நான், அனு இனி ராப்பூரா தனி. இப்படி உன்னோடு இருக்கப் பிடிக்கவில்லை. எந்த சங்கட சமயத்தையும் சந்திப்பதில் மனிதனுக்கு விருப்பம் கிடையாது. அடிப்படை வேறென்ன, பயம்தான். ஆனால் இவளைத் தனியாக விட்டும் போக முடியாது!
கைக்கு ஆவி பறக்கும் கோப்பையுடன் அனு வந்தாள். அவளுடைய ப்ரசன்னமே எனக்கு மாருதம் வீசினாற்போல் ஒரு தென்பாய் இருந்தது. கப் என் கையில் மாறுகையில் கவனித்தேன். நகக் கணுக்களில் என்ன ஆரோக்கியமான ரோஜாத் திட்டு! சுண்டு விரலிலும், அடுத்ததிலும் ஒரு செப்பு மோதிரம், இரண்டு கிராம் பொன் தேறாது. ஒரு நெளி. நெளியில் பதித்த கற்கள். கண்ணாடியென்று காணக் கண்ணாடி வேண்டாம். கட்டை விரவில் சுழி. ரேகை அடுக்கில் தனித்தனியாக எண்ணிவிடலாம்.
அந்த ஸேட்டின் புடவை அவள் நடமாட்டத்திற்கு ஒரு புனிதத்தனத்தைத் தந்தது. கூந்தல் முடிச்சில் சொருகித் தொங்கும் ஜாதிமல்லிச் சரத்தினின்று, திடீர் திடீர் கம்".
இதுபோன்ற நுணுக்கங்களைக் கவனிக்க, தரிசிக்க இதுதான் சமயமா? ஆனால் அது என் இஷ்டமில்லையே! ஆனால் அவை இப்பத்தானே எனக்குத் தென்படுகின்றன!