என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு 88
தரிசனம் என்பதே ஒரு தடவைதான். அதுபற்றித் திரும்பத் திரும்ப மிச்சமெல்லாம், பிறரையும் தன்னையும் ஏமாற்றிக்கொள்ள, அதற்குக் காட்டும் கிச்சுகிச்சு.
இதற்குப்பிறகு உன் வீட்டுக்கு நான் வருவது தானாகவே குறைந்துபோயிற்று. நீகூடக் கேட்டாய். உன்னிடம் என்னது சொல்வது?
அவள் கேட்கவில்லை; கேட்கமாட்டாள். அன்று நான் அவள் உயிரை நிர்வாணமாகப் பார்த்துவிட்டேன். அப்படி ஒன்று இருக்கிறதா? என்ன என்று கேட்கிறாயா? இருக்கிறதென்று எனக்கே இப்பத்தானே தெரிகிறது! ஆத்மா என்கிற வார்த்தையை வேணுமென்றே விலக்குகிறேன். ஆத்மாவைப்பற்றி என்ன கண்டேன்?
உயிரின் நிர்வாணத்தில் Sex கிடையாது. I 1ove her Terribly. அவள் நினைப்பில் பற்றி எரிகிறேன. ஆனால் அவள்மேல் எனக்கு இச்சையில்லை. Strange!
புரட்டு பக்கங்களை: The end of the chapter for me.
இந்தக் கடிதத்தை எழுத உட்கார்ந்தபோது, இதைத் தபாலில் சேர்த்ததும் ஊரைவிட்டுப் போய்விடலாம் என்று உத்தேசித்திருந்தேன். எழுதி முடித்ததும் அது end of the chapter ஆகாது என்று தெரிகிறது. எங்கு போனாலும் என்னோடு இருக்கிறேன்! கேட்கிறேன். உண்மையில் இங்கே என்ன இருக்கிறது? முதலில் உண்மை என்பதே என்ன? எனக்கு இப்போ தோன்றுகிறது. Truth is an explosion.
வெடித்த பின்னும் மிச்சமிருப்பின் அது உண்மையான உண்மை அன்று.
Geerge Saunders என்று ஒரு சினிமா நக்ஷத்ரம். துரக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டு அவன் இறந்துபோன போது ஒரு குறிப்பை விட்டுவிட்டுப் போனான்.