பக்கம்:அவள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 லா. ச. ராமாமிருதம்

ஒட்டிக்கறது. இளைச்சு, கறுத்துப்போய்...பாதி நாளைக்குச் சமைக்கமாட்டானாம். ராத்திரி டூட்டியிலிருந்து திரும்பினதும், ஆடையைக்கூடக் களையாமல் ஏற்கனவே நாள் கணக்கில் விரிச்சே கிடக்கும் படுக்கையில் பொத்துனு விழுவதுதான் தெரியும், நினைப்பு வரச்சே அது ஒன்பதோ பத்தோ அதுக்குமேல் சமைக்க எங்கே கைவரும்? 'டீ'க் கடையில் காபி, டீ, பன், மசால் வடை, எது கிடைச்சதோ, காலத்தை ஒட்டு.

உயிருடன் இருப்பது ஒரு நிலை. உயிரோடு இருக்கிறேன் என்று உணர்ந்து வாழ்வது வேறு நிலைதான். ப்ரக்ஞையின் முதல் மூச்சென்று சுலபமாகச் சொல்லிவிட்.ேன். என்னுள் ஏதேதோ புரண்டெழுந்து- விழிப்பு என்பது சாமான்யமானதா?

ஆகவே பிள்ளைக்குச் சமைச்சுப் போட வந்திருக்கேன். என்ன, முட்டி முட்டி இன்னும் ஒரு மாசம் இருக்கலாம். ஊரில் காரியம் மலையாக் காத்துக்கிடக்கு. தை வந்ததும் கார் அறுப்பு-வயலில் கதிர்கள் கனம் தாங்காது சாஞ்சுடும். கொல்லையில் தேங்காய்க் குலை முக்தியிருக்கும். இப்பவே எந்த ராத்ரி பங்காளி வந்து பறிச்சுண்டு போயிருக்கானோ? சுப்புவுக்கு வரன் மும்முரமா தேடியாகணும். இந்தத் தைக்கேனும் வழி பிறக்குமா?

கறிவேப்பிலைக் கன்னு புழைச்சுடுத்துன்னு கடிதாசிலே ஓரத்துலே ஒரு வரி கண்டதுமே உடம்பு பரபரத்துப் போச்சு. அதைப் பார்க்காமல் நினைக்காமல் இருப்புக் கொள்ளல்லே. இங்கே இவன், அங்கே அது-அதனாலே ரெண்டும் ஒண்ணாயிடுமா. இதென்ன தத்துப் பித்து மனம் மனசைச் சீறித்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/132&oldid=1496887" இலிருந்து மீள்விக்கப்பட்டது