பக்கம்:அவள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உச்சி வெய்யில் 81


"அப்பப்பா, என்ன ருசி இந்தக் கீரை பொரிச்சுக் குழம்பைத் தினம் பண்ணிப் போட்டாலும் ஆபுசுக்கும் அலுக்காமே சாப்பிட்டுண்டிருப்பேன்."

கூடச் சாப்பிட உட்கார்ந்தவர், இலைமேல் முகம் இன்னமும் தாழக் குனிந்தது, கண்ணில் துளும்பலை மறைக்க.

"ஸேது, நீ தினம் ஒரு வேளையானும் சமைச்சுக்கணும்டா, ஒண்ணுமே முடியாட்டா, சாதம் வடிச்சுத் தயிர், பருப்புப் பொடி, கறிவேப்பிலைப் பொடி பண்ணி வெச்சுட்டுப் போறேன். அப்பளாம் சுட்டுக்கோ.”

"உத்யோகத்தில் அப்படியெல்லாம் கையடிச்சுக் வயிற்றுப் பிழைப்பு விட்ட வழி தான் உண்டு."

"அப்படியானா, ஒரு கலியானத்தைப் பண்ணி வெச்சுட வேண்டியதுதான்."

"சரியாப் போச்சு, நானே இன்னும் ஊணிண்டபாடில்லே. கல்யாணம் ஒண்ணுதான் குறைச்சல்."

"ஏண்டா, என் தள்ளாமைக் காலத்தில் இப்படிப் படுத்திறேள்?"

சிரித்தான்,"காலா வட்டத்தில் எல்லாம் சரியாப் போயிடும்பா"

"ஆபத்தாமபஹத்தாரம் தாதாரம் ஸ்ர்வ ஸ்ம்பதாம்-மணிசத்தம் கேக்கறாப்போல இருக்கே! ஆமாம், அவனே தான். ராமா, வயிற்றிலே பாலை வார்த்தையா?" பாறையிலிருந்து எழுந்திருந்தார். "ராம மந்த்ரத்தைவிட மந்திரம் இல்லேடா சேது"

‘விர்ர்ர்'ரென்று அவர் காலில் உராய்வதுபோல வந்து நிறுத்தி இறங்கினான். அவன் முகம் கடுத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/133&oldid=1496894" இலிருந்து மீள்விக்கப்பட்டது