உச்சி வெய்யில் 99
"என் புடவை! என் புடவை!" அலறினாள்.
அது எங்கே பறந்துபோய், எல்லாருக்கும் இன்னும் மாயம் காட்டிக்கொண்டிருக்கின்றதோ? அல்லது எந்த தந்திக்கம்பத்தில், எந்த மரத்தின் உச்சாணிக் கிளையில் சிக்கி...
"எங்கேன்னு தேடறது? இப்போ என்ன செய்ய முடியும்?"
"என் நயினா! என் நயினா! என்னைப் பலி போட்டுடுவாரு:”
"அப்போ இங்கே தண்ணிலேயேதான் இருக்கப் போறியா?"
ஒன்றும் புரியாமல் கைகளை உதறினாள். விழிகள் திகில் சுழிகள். "இதோ என் வீடு. இப்போ உள்ளே வா, யோசிப்போம். உன்னை ஒண்னும் செய்யமாட்டேன், வா!”
ஒடுங்கிக்கொண்டே உள்ளே வந்தாள். வாசற்கதவை இழுத்து மூடினான். இருக்கும் ஒரு அறையில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு, ‘டீ’ போட்டு இரண்டு தம்ளர்களில் ஊற்றிக்கொண்டு வந்து, ஒன்றை அவளிடம் கொடுத்துவிட்டு, தான் மெதுவாகப் பருகினான். இது நானா வாங்கிக்கொண்ட வம்பா? மத்தவங்கமாதிரி நானும் வேடிக்கை பார்த்துட்டுப் போயிருக்கலாமோ? ஆனால், எனக்கு அப்படித் தோனல்லியே!
சரியான நாட்டுக்கட்டை, குதிரைக் குட்டிபோல "விண்'னென்றிருந்தாள். மாநிறத்துக்கும் மட்டு. கூந்தல் நீளமாய், நனைந்து அடையாய்ப் பிடறியில், தோள்களில் முதுகில் ஒட்டிக்கொண்டிருந்தது. புஜங்களில், கழுத்துக்குக் கீழ் மார்பில், ஜலம் முத்திட்டு நின்றது. உடம்பு இன்னமும்