பக்கம்:அவள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உச்சி வெய்யில் 101


"வேறே வினையே வேண்டாம். இல்லாத ஜோடனையெல்லாம் பண்ணிடுவான். ஐயோ, என்னை இனி யாரு கலியாணம் கட்டுவாங்க?" மறுபடியும் அழ ஆரம்பித்தாள்.

"நான் கட்டிக்கறேன்.”

எப்படி இந்த வார்த்தை வெளி வந்தது? அவனுக்கே தெரியவில்லை. மீண்டும். -

"ஆமா, நான் கட்டிக்கறேன்.”

ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனாள். வாய் லேசாய் மொட்டுப்போல் திறந்தது. குழந்தைபோல் இருந்தாள். பாவமாய், அகதியாய்...அவளை அப்படிப் பார்க்க அவனுக்கு என்னவோ பண்ணிற்று.

"இதோபார் ஆமா"-உற்சாகமானான். நீ யாரோ நான் யாரோ, உன்னை முன்னே பின்னே பார்த்ததில்லை. உனக்கும் நான் அப்படித்தான். ஆனால் நான் உன்னைக் கட்டிக்கிறேன். நீ எனக்கு ஆக்கிப் போடுவியா, மாட்டியா?”

பொம்மை மாதிரி தலையை ஆட்டினாள். அவளுடைய திகைப்பில் அவன் சொன்னது அவளுக்குச் சரியாகப் பதிலானதோ?

"ஆக்கத் தொியுமா?" சிாித்தான். "தொியாட்டியும் அக்கறையில்லை. துணையிருப்பேல்ல? நீ எனக்கு, நான் உனக்கு. நமக்குக் கலியாணம் இப்பிடித்தான் கூடணும்னு இருந்திச்சின்னா யார் என்ன செய்ய முடியும்? வா, எளுந்திரு."

வீடு திறந்தபடி கிடக்க, இறங்கி, தெருவென்ற பேரில் உருவாகிக்கொண்டிருக்கும் அகல நடைபாதையில் உச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/145&oldid=1497030" இலிருந்து மீள்விக்கப்பட்டது