இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102 லா. ச. ராமாமிருதம்
வெயிலில் இருவரும் பக்கத்தில் பக்கத்தில் நடந்து செல்கையில் ஆங்காங்கே வாசல்களில் தலைகள் எட்டிப் பார்த்தன. ஊரில் அவர் இன்னேரத்துக்கு அப்பா மாத்யான்னிகம் பண்ணிக் கொண்டிருப்பார். ஆம், நான் எங்கே அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்? இவளும்தான். எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? ஆனால் நிச்சயம் இனி கேள்விக்குறியில்லை. இனி அடிதிரும்ப முடியாது.
சூரிய பகவானே, குழந்தைகளுக்கு அருள் புரியுங்கள்.