பக்கம்:அவள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோடு


புவனா, அபிதா, முரளி-மூவரும் வீட்டு வாசலுக்கெதிரே சின்ன குறட்டுக்கல்லில் அப்பா- அம்மா விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.

அபிதா, தான் தான் அப்பாவாயிருப்பேனென்று சண்டி பண்ணினாள். மூவரில் அவள்தான் வயதில் சிறியவள்.

"அப்போ பாப்பா யார்?" என்று புவனா கேட்டாள். மூவரில் அவள் தான் மூத்தவள்.

"நீ"

"நான்?" - முரளி, தன் மார்பை சுட்டிக் காட்டிக் கொண்டான்.

"நீ-அம்மா"

"ஏது, எல்லாம் தலைகீழ்ப் பாடமாயிருக்கே!"

குரல் கேட்டு மூவரும் திரும்பினர். ஒரு கிழவர் பின்னால் நின்றுகொண்டிருந்தார். நீண்ட மயிரை நெற்றியிலிருந்து பின்னுக்குக் கோதிவிட்டிருந்தார். கறுகறுவென்று தாடி.

“என்ன, வீடு பூட்டியிருக்கு?"

"அம்மா, ஆபிஸ் போயிருக்கா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/147&oldid=1497037" இலிருந்து மீள்விக்கப்பட்டது