பக்கம்:அவள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106 லா. ச. ராமாமிருதம்



கண கண கண கண வென அடுக்காய் ஒலித்தது. ஜாலரின் அறையல் கொப்புளித்தது. அடுக்கு தீபாராதனை போலும்.

“வழிப்போக்கன். தாசுத்துக்கு ஜலம் கேட்கலாமென்று இந்த வீட்டுக்கெதிரேநின்றேன். வீடு பூட்டிக்கிடக்கு. அதற்குள் குழந்தைகள் விளையாட்டில் சுவனம் மாறிவிட்டது.”

“Oh, that is alright. G, கதவைத் திறவேன்!”

எல்லோரும் ஊர்வலமாக நுழைந்தனர், பெரியவரைத் தவிர. அவர் வாசற்படிக் கட்டை ஓட்டி எழுப்பிய மேடை ஒன்றில் அமர்ந்துவிட்டார்.

“ஏன், உள்னே வாங்கோளேன்?” “இல்லே, இங்கே காற்று ஜிலுஜிலுன்னு இருக்கு.”

உடையைக் கழற்றி எறிந்துவிட்டு, லுங்கி உடுத்துக்கொண்டு, வெளியே வந்து எதிர் மேடையில் அமர்ந்தான். உடம்பு, ஆவி கக்கிற்று.

“உஸ். கிரி,காப்பிக்கு வழி இருக்குமா?” என்று கூவினாள்.

உள்ளேயிருந்தபடி, கையைச் சிலம்பம் ஆட்டினாள். இல்லையென்று.

“நல்ல வீடய்யா இது. வரது வாரத்துக்கு ஒருநாள். அங்கே, நாயர் கடை டீயை விட்டால் வேறு கதியில்லை. ஊர் ஊராய் ஓடிப்போய் சம்பாதிச்சாலும், நம் வீட்டில் நமக்கு ஓரு முமுங்கு காப்பிக்கு, வாய் முகம் எல்லாம் தீபமங்கல ஜோதி ஆயிடறது.”

“புவனா ஆத்துக்குப் போய்ப் பாட்டியைக் கேட்டுப்பால் வாங்கிண்டு வா. கூடவே முரளியை அழைச்சுண்டு போ. ஜே, உங்களுக்கு வேற்றாள் எதிரே நம் அழுக்கை அலசறத்துலே தனிக் குஷி! இல்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/150&oldid=1497137" இலிருந்து மீள்விக்கப்பட்டது