112 லா. ச. ராமாமிருதம்
வில்லை. அவர் கையில் பிடித்திருத்த வேட்டியின் கொசுவத்தின் துல்லியம் அவன் நெஞ்சில் புலுபுலுத்தது. உலர்த்தணுள் போல் ஆசையாயிருந்தது.
"இப்படிக் கொடுங்கள், நான் உலர்த்தறேன்."
அவர் பார்வை கூடத்தைச் சுற்றி அலைந்தது.
"பரவாயில்லை, கொடுங்கள். நான் உலர்த்தறேன். என் தகப்பனார் இருந்தால் அவருக்குச் செய்ய மாட்டேனா?"
"தகப்பனார்மேல் சபலத்துக்கு வயது தாண்டிப் போச்சுன்னு நினைக்கிறேன். பிள்ளை கை சிசுருஷையை வாங்கிக்க ரெண்டுபேருமே பாக்கியம் பண்ணியிருக்கணும்."
பேசிக்கொண்டே தேடும் அவர் நாட்டம். வாசல் தாண்டியதும் குறுகிய ரேழியில் கட்டியிருக்கும் நைலான் கயிறுமேல் விழுந்துவிட்டது. நிமிஷமாக உலர்த்தி, பட்சமாக வேட்டியை ஒருமுறை தட்டிவிட்டு மீண்டும் படிக்கட்டு மேடையில் அமர்ந்துவிட்டார். இடுப்பு வேட்டி ஈரம். ஆனால் அது இடுப்பிலேயே காய வேண்டியதுதான். அவன் நின்றபடி தன்னை ஒருமுறை பார்த்துக்கொண்டான். எங்கேயே ரோசமாயிருந்தது. நெஞ்சில் எங்கோ சிலாம்பு உறுத்திற்று.
"ஏன், 41 வயதில் எனக்குத் தகப்பனார் இருக்கப்படாதா? தனக்குத்தான் முனகிக்கொண்டான். ஆனால், வந்தவர் துடித்து எழுந்தார்.
"அபவாதம்! அபவாதம்! நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. என் தகப்பனார் ஐம்பதுகூட நெருங்கவில்லை. எனக்கு இருபத்திமூணாவது வயதில் காலமாகி விட்டார். என்னுடைய முதல் சம்பளத்தை அவர் கையில் கொடுத்து நமஸ்கரிக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே என்கிற ஓயாத அரிப்பு, இத்தனை நாள்