பக்கம்:அவள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 லா. ச. ராமாமிருதம்


ஆமாம், இதையெல்லாம் இவரிடம் ஏன் சொல்வித் கொண்டிருக்கிறேன்? சொல்லி என்ன ஆகணும்? சொன்னால் என்ன? சொல்லிக்கனும்போல் இருக்கு. கோவிலுக்குப் போய் நாம் முறையிட்டுக் கொள்ளவில்லை? இங்கேயும் கல்தானே! இவராவது உயிருள்ள மனுஷன்.

அப்பா-அம்மா சண்டை எங்கு இல்லை? ஆனால், எங்கள் அம்மா கொஞ்சம் ஸ்பெஷல். நியாயம் உண்மையாக அவள் அறியாள். வாக்குவாதத்தில் வெற்றி எவ்வழியேனும். அது ஒன்றுதான் அவள் குறிக்கோள். அவள் இழைத்த தவறுகள் அவள் அகராதியில் கிடையாது. அத்தனையும் பிறருடையதே-பிள்ளையாகட்டும் புருஷனாகட்டும் அடுத்த வீட்டாராகட்டும் விதியாகட்டும் அது கடவுளே ஆகட்டும்.

சண்டையென்னவோ உப்பு- புளியில்லாத விஷயம் தான். உண்மையில், உப்பு-புளியில்தான் ஆரம்பித்தது. ரஸத்திலோ, குழம்பிலோ இப்போ ஞாபகமில்லை. மறதியாக உப்பை இருமுறை போட்டுவிட்டதோடல்லாமல், தவறு நேர்ந்துவிட்டதையும் ஒப்புக்கொள்ளாமல், அப்பாவுக்குத்தான் நாக்குக் கோளாறு என்று வம்பு செய்தாள். தர்க்கம் முற்றி வம்சாவளியில் பாய்ந்ததும், உங்கள் அம்மா கையில் இதைவிட உப்பு நீங்கள் தின்று இந்தக் கண்ணாரக் கண்டிருக்கேன்” இதுமாதிரி ஏதோ பேத்தினதும் -

-அவ்வளவுதான் கூடத்தில் நிமிஷம் வெடித்தது. அப்பா, கையை உதறிக்கொண்டு கலத்தைவிட்டு எழுந்தார்-நாங்கள் உட்கார்ந்த இடத்தில், பயத்தில் அப்படியே உறைந்துபோனோம்-கையை அலம்பிக் கொண்டு, பூஜையறையில் காத்ரெஜைத் திறந்து, தனக்கு வேணதை எடுத்துக்கொண்டு- தன் குழந்தைகளைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/158&oldid=1497054" இலிருந்து மீள்விக்கப்பட்டது