தோடு 115
திரும்பிக்கூடப் பார்க்கவில்லை-சொக்காய்கூடப் போட்டுக்கொள்ளவில்லை, மேல் துண்டோடு வாசற்படியிறங்கினவர்தான். இன்னும் பார்க்கப் போகிறோம்.
எல்லாம் சாயந்திரம் திரும்பி வந்துடுவான்னு நெனைச்சோம். எனக்கு நன்னா இதுமட்டும் நினைப்பிருக்கு. அவருக்குப் பிரியமான வெங்காயத்துாள் பஜ்ஜி போட்டு அம்மா வெச்சிருந்தாள்.
சிங்கம் மாதிரி உத்யோகம். கொள்ளை வசதிகள். இத்தனையும் விட்டு மனுஷன் எங்கே போனான்? எப்படிப் போகத் துணிஞ்சுது? முடிஞ்சுது? கம்பெனி, பத்திரிகையில் விளம்பரம் செய்தது. சல்லடை போட்டுச் சலிச்சுப் பார்த்தாச்சு. பூமி விழுங்கிவிட்டது.
அப்பவும் அம்மாவுக்குத் தன் வாழ்வுக்கு உலை வந்தது. பெரிசாகப் படவில்லை. அவளுடைய தோடைக் கானோம் என்று மூணு நாளைக்கு விடாமே அலர்த்தினாளே பாக்கணும்!
இத்தனைக்கும் அவளுடைய தோடு இல்லை. பாட்டியினுடையது. அப்படியே அப்பா எடுத்துச் சென்றிருந்தாலும், அவருடைய தாயாரின் தோடுக்கு, அவருக்கு இல்லாத உரிமை வேறு யாருக்கும் கிடையாது. மற்றப்படி, அம்மா சொந்தம் கொண்டாடும் நகைகள், பண்டங்கள் எல்லாம் அப்படி அப்படியே காத்ரெஜில் இருந்தன. அவைகூட அவர் வாங்கினவைதான். அவர் பண்ணிப் போட்டவைதான். அம்மா பிறந்த வீட்டிலிருந்து கொட்டிக் குவித்துக்கொண்டு வந்துவிடவில்லை. இதை நாங்களே பொறுமையிழந்து என்றேனும் இடித்துக் காட்ட நேர்ந்தால்...
"ஆமாம் பொண்ணைத்தான் கொடுப்பா, இன்னும் வேறு என்னத்தைக் கொடுப்பா ?” - -