பக்கம்:அவள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvi

 

பட்டறையில் எஃகு உருவாவதுபோல் நெஞ்சின் உலையில் காய்ச்சி அடித்துத் தீட்டிப் பதப்படுத்தி சொல்லுக்கு மந்திரம் ஏற்றும் ஆக்க சக்தி.

ஏன் விமர்சகர்கள், ஏறக்குறைய என் அறுபது ஆண்டு எழுத்தில், நான் சொல்லும் விஷயத்தில் குடும்பத்தை விட்டு நான் இன்னும் வெளி வரவில்லை என்று சொல்கிறார்கள். உண்மை. இப்போது அறிகிறேன், நான் என் முன்னோர்களின் சரித்ரீகன். அவர்களுக்கும் குலதெய்வத்துக்கும் இடையே மர்ம வசிய (mystic) உறவு பற்றியும், அவர்கள் அவளைச் சுற்றினார்களா? அல்ல அவளும் அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்தாளா எனும் கேள்விக்குப் பதிலைத் தேடலைப் பதிவு செய்வதற்கென்றே எழுத்து என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று இன்று என் அந்தியின் மந்தாரத்தில் தோன்றுகிறது

இந்தக் காரியத்தில் அவளின் தன்மையை ஆய்வது தரும் இன்பமும் கண்டுவிட்டேன்.

என் முன்னோர்கள் என்கையில் என் பாட்டனார் தலைமுறை பற்றிச் சொல்கிறேன்.

அவர்கள் அதீதமானவர்கள் There was a streak of abnormality about them. ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கதையிருந்தது. ஒரு சிலர் அவர்கள் காலத்திலேயே legends ஆகிவிட்டார்கள். என் பாட்டனார் வரகவி. கனவில் பிள்ளையார் வந்து வாயில் கற்கண்டு போட்டதாகக் கண்ட மறு நாளிலிருந்து பாட ஆரம்பித்து விட்டார். அவர் தங்கை-என் தாய்வழிப் பாட்டி- அவளும் கவி. என் பாட்டனார் மூத்த சகோதரர், எழுதப் படிக்கத் தெரியாதவர், குடும்பத்தில் உதவாக்கரை, அவருக்கு அம்பாள் தரிசனமானாள்.

என் பாட்டனாரின் தாயாரிடம் எங்கள் குலதெய்வம் (பெருந்திரு. ப்ரவர்த்த ரீமதி) ஒரு மண்டலம் ப்ரஸன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/16&oldid=1495873" இலிருந்து மீள்விக்கப்பட்டது