118 லா. ச. ராமாமிருதம்
தந்திகள்-நமக்குத்தான் கணக்கற்றவை, ஒவ்வொன்றின் வேர்ச் சுழிகூட-அவள் அறியாவிட்டால், அது அங்கு இல்லை- அவைகளின் ஸ்வரனுஸ்வரஸ் தானங்கள் அவளுடைய மீட்டலில் அதனதன் ஸாயுஜ்யத்துக்குக் காத்துக் கொண்டிருக்கின்றன. அதனதன் தனித்தனித்தாள ப்ரமாணங்கள் . லயப்ரமாணங்கள் அவளுக்குத்தான் தெரியும். அதனதன் பரமாணிக்கங்களும் அவளுக்குத்தான் சொந்தம். அவள் பண்ணிக்காட்டும் ஸ்ருதிபேதங்கள் நமக்கு அப்பாற்பட்டவை. ஆனால், அவள் ஸ்ருதிஸுத்தமானவள். பிந்துமாலினி, ஸுநாத விநோதினி. அமிர்த வர்ஷணி, லீலா கான லோலி.
நாமங்கள் கம்பீர சாட்டை. அவனுக்குத் தொண்டை வெளியே குதித்துவிடத் தவித்தது.
நாமங்கள், தாம் இறங்க இடம் தெரிந்து தைக்கும் ஏவு கணைகள்.
தகதிமி திமிதக-நெஞ்சை ஏதோ நடனம் மண்ணாய் மிதித்தது.
ஸமகஸஸமகரி நிமகஸ -
அந்தரத் தந்தியில் மந்திரத் தும்புரு.
தந்திர ப்ருகடை
தந்தினத்தன தான.
ஏமேமோ பழக்கமிலா வார்த்தைகள், ஓசைகள். காலம் கடந்த நித்திரை கலந்து அவன் நரம்புகளில் விழித்தெழுந்த மாதிரியிருந்தது.
இவர் என்னை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? இந்த இன்ப பயங்கரம், இந்த நிலை இன்னும் சற்று நீடித்தால் நானே எனக்கில்லாமல் போய்விடுவேனோ? எனக்கு நான் வேணுமே! என் வீடு, என் கிரிஜா, என் அபிதா, என் அம்மா, இந்த மொஸாய்க் தரை, கொல்லைப்புறத்