பக்கம்:அவள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xvii

மாயிருந்தாளாம். என் பாட்டனாரின் பெற்றோர்கள் கோயிலில் தினம் அர்த்தஜாம தரிசனம் பண்ணிவிட்டு -- அந்த நாளில் அர்த்த ஜாமம் என்றால் அர்த்த ஜாமம் தான், இரவு 11-00, 11-30 மணி-பிறகுதான் ராச்சாப்பாடு. அப்படி அறுபது வருடங்கள். (எனக்கு அறுபது வருடங்கள் எழுத்து. எல்லாமே தவம்தானே!)

ப்ரஸ்ன்னமென்றால் தெய்வம் தலைவிரித்து ஆடவில்லை. குறி சொல்லவில்லை. பாட்டி எழுதப் படிக்கத் தெரியாதவள். ஒருநாள் விடியற்காலை விழித்தெழுந் தும், ஸம்ஸ்கிருதமாய் வேதங்களிலிருந்தும் உபநிஷத்களிலிருந்தும் வாயிலிருந்து கொட்டினவாம். (இதையே பூர்வ ஜன்ம வாசனையின் நிரூபணமாய்க் கொள்ளலாமா?) ஊரே 'கொல்'லாகிவிட்டது. பக்க வட்டாரங்களிலிருந்து புலவர்களும் விற்பன்னர்களும் வந்து அவளைக் கேள்விகள், விளக்கங்கள் கேட்டு, சந்தேகங்கள் தெளிவடைந்து அதிசயித்து நின்றனராம். கூடமே 'ஸதஸ்’ ஆகிவிட்டது. அந்த நாற்பது நாட்களும் ஏதேதோ அதிசயங்கள் நேர்ந்தனவாம். பாட்டியின் உள்ளங்கையில் சக்கரம் தோன்றிற்றாம். சொல்ல வந்தது யாதெனில், என் எழுத்தில், என் வம்சாவளிக்கும் பங்கிருக்கிறது.

***

ஏன் பிறந்தேன்?
எங்கிருந்து வந்தேன்?
எங்கே போகிறேன்?

-புத்தி வளர்ச்சியின் இன்றியமையாத, ஓயாத கேள்விகள். சிந்தனையின் ஓயாத உறுத்தல். இந்தக் கேள்விகளுக்குப் பதில் தேடலின் அடிப்படைக்கு ஆரம்ப அனுமானம்தான் தெய்வம்! ஒரு விளிப்பு; பயணத்தின் திசைமானி. அந்தத் திசைமானியை இயங்க வைக்கும் காந்தம் ஆண், பெண் அறிவது எதிலும் அவன் அவள்

--B

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/17&oldid=1495891" இலிருந்து மீள்விக்கப்பட்டது