ஜனனி 127
'அவளா குடுத்தா! நீ குடுத்தே!'
'இருந்தா என்ன? பாருடீ இந்தப் பாவத்தை, என் மாரிலே பாலைத் தேடுது'
'சரிதான். என் புருசன் பட்டாளத்திலேருந்து வந்தால், 'இந்தா, சாமி குடுத்துது; கொஞ்சு'ன்னு குடுக்கச் சொல்றியா?"
"கொடும்பாவி, அதனாலே கொலை பண்ணனுமா?"
'சரி, என்னா பண்ணப்போறே?’’
'ஒடிப்போயிடுவோம்.'
'அதுவும் உன்னை நம்பித்தானே!"
'சரி, வேண்டாம். இந்தக் குளத்தங்கரையிலேயே விட்டுட்டுப் போயிடுவம், தானா உருண்டு தண்ணியிலே விழுந்தாலும் விழுந்துட்டுப் போவுது. பண்ணின பாவம் பத்தாதுன்னா நம்ம கையினாலே சாவணும்? இந்த ஒரு தடவைகூட எடுத்துவிட மாட்டியா?”
'நீ புண்ணியம் தேடற அழகை நீதான் மெச்சிக்கனும்-’’
'அடி பாவி ஆடு மாடுங்ககூட உன்னைவிட ஒசத்திடி!"
'அது சரி. நான் மனுச ஜன்மந்தானே? இந்த வெட்டிப் பேச்செல்லாம் பேசி நேரத்தை ஒட்டாதே, விட்டுட்டு வரதுன்னா வா, நான் கண்ணாலே கூடப் பாக்கமாட்டேன். பாத்தாக்கூட ஒட்டிக்கும்.”
"நீ இப்படிப்பட்டவன்னு எனக்கு அப்போ தெயாதுடீ, தெரிஞ்சா சாகுவாசங்கூட வெச்சுக்க மாட்டேன். உனக்கு எப்பவும் உன்னைப் பத்தின நெனப்புத்தானே?"