ஜனனி 129
அவர் சம்சாரம் வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தாள். கோலத்தில் குனிந்த தலை நிமிர்ந்த போது, அவள் முகம் அழகாக இருப்பதை ஐயர் கைக்குழவி கண்டது. வாலிபந்தான். ஐயர் கைமூட்டையைக் கண்டதும், அவள் புருவங்கள் அருவருப்பில் தெரிந்தன.
'இப்போ என்ன இது:
"அடியே, இன்றைக்கு என் மனம் ஏதோமாதிரி குதிக்கிறதடி உள்ளே வா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா நமக்கு ஒரு குழந்தை கிடைத்திருக்கிறது. நான் உன்னிடம் அப்பொழுதே சொன்னேனே, மூன்று நாட்களாய் ஒரே கனவைக் கண்டு கொண்டிருக்கிறேன் என்று. வா, வா." தொண்டை கம்மிவிட்டது.
அவர் கண்களில் ஜலம் தாரையாய்ப் பெருகி நின்றது. பூஜைக்கூடத்தின் நடுவில் செதுக்கிய தாமரைப்பூக் கோலத்தில் குழந்தையை வளர்த்திவிட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் படங்களுக்குக் கைகூப்பி நின்றார். அவர் தேகம் நடுங்கிற்று. - அவர் மனைவி சாவகாசமாய்ப் பின்னால் வந்தாள். ஐயரின் பரவசம் அவளுக்குப் புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை. கோலக் குழாயை ஜன்னலில் 'லொட்'டென்று வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு கையை ஊன்றிக் கொண்டு காத்துக்கொண்டு நின்றாள்.
என் கனவைச் சொன்னேனோ?”
“எந்தக் கனா? நீங்கள் சொல்ல ஆரம்பித்தால் காத வழி போகுமே, உங்கள் கனா!'
'மூன்று இரவுகளாய் ஒரே கனவைக் கண்டுகொண்டிருக்கிறேன்... எங்கிருந்தோ ஒரு குழந்தை என் பின்னால் வந்து, மேல துணியைப் பிடித்து இழுத்து, அதன் கழுத்து
அ.-9