132 லா. ச. ராமாமிருதம்
திடீரென்று அங்கே தேங்கிய சப்த ஒய்ச்சலைக் கண்டதும் அம்மாளுக்கே பயமாய்விட்டது. அவசர அவசரமாய்ப் பாலைக் கொண்டுவந்து குழந்தைக்குப் புகட்ட ஆரம்பித்தாள். வெள்ளிக் கரண்டியில் கொஞ்சங் கொஞ்சமாய் ஊட்டுகையில் குழந்தையின் கடைவாயில் பால் வழிந்தது.
திடீரெனக் குழந்தையின் முகத்தின்மேல் இரண்டு நெருப்புத் துளிகள் விழுந்தன. அம்மாளின் கண்ணிர் கனலாய்க் கொதித்தது. அதன் வெம்மை அம்பாளின் உள் இறங்குகையில், இவள் ஆத்திரப்படுவது வெறும் கோபத்தினால் அல்ல; வெதும்பிப்போன தன் வாழ்க்கையின் வேதனை தாங்காமல் துடிக்கிறாள்' என்று அவள் உள்ளத்துக்குச் சொல்வதுபோல் இருந்தது.
குழந்தைக்குப் பசி தீர்ந்துவிட்டது. அம்மாளின் தாலியைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். அம்மாவுள் கல்லாய் உறைந்துபோயிருந்த ஏதேதோ, இப்பொழுது நெய்ப் பாறை உடைவதுபோல் கிளர்ந்து உருகும் இன்பம் பயங்கரமாக இருந்தது. குழந்தையை இறுக அணைத்துக்கொண்டு, தன் கணவரிடம் சென் றாள்.
'பார்த்தேளா குழந்தையை, எவ்வளவு கனம்! என்ன பண்றேன், பஞ்சாங்கத்தைப் புரட்டிண்டு?’’
நேற்று என்ன நக்ஷத்திரம், பார்க்கிறேன். ஜாதகம் கணிக்கலாமா என்று-'
சரியாய்ப் போச்சு: இது என்னிக்குப் பிறந்தது, எந்தவேளை, என்ன ஜாதின்னு கண்டோம்? இதைப்பத்தி நமக்கென்ன தெரியும்?”
ஐயர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவர் மனைவியின் உள்வாக்கு அவளையும் அறியாமல், ஆதிபரையின்