பக்கம்:அவள்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜனனி 137

சொல்ல இயலாத ஒரு பயமும், அப்பயத்தின் மூலமாகவே ஏற்படும் கோபமும் எழுந்தன. போனால் போகிறது, ஒரு தரந்தான் இடங்கொடுப்போம் என்று ஏன் தோன்றவில்லை என அவளுக்கே தெரியாது. அவளை ஆட்டிய பயம் தலைதுாக்கி நிற்கையில், அவள் என்ன செய்ய முடியும்?

ஜனனி லேசில் அவளை விடுவதாக இல்லை. ஒருநாள் மாலை அம்மாள், மகனுக்கு எடுத்துவிட்டுக்கொண்டிருக் கையில், தைரியமாய் மடிமீது ஏறி, மார்புத் துணியைக் கலைத்தாள். அம்மாளுக்கு ஆத்திரம் மீறிவிட்டது. அவளை இழுத்து எதிரே உட்கார வைத்து, 'தான்தோணிப் படையே' என்று வைது, முதுகில் இரண்டு அறையும் வாங்கி விட்டாள்.

குழந்தை ஒவென்று அலறினாள். ஐயர் அறையினின்று ஓடிவந்து அவளை வாரியனைத்துக் கொண்டார். அம்மாள் ஆங்காரத்துடன், மார்போடு ஒட்டிக்கொண்டிருந்த தன் மகனையும் பிடுங்கி அவனையும் அறைந்து விட்டு, சமையலறையில் போய் எதையோ உடைத்தாள். அவள் காரியம் அவளைச் சுடும் வேதனை அவளுக்குத் தாங்க முடியவில்லை. ஐயர் வாய் அடைத்துப்போய்த் தவித்தார். கண்களில் ஜலம் ததும்பிற்று.

ஜனனி இப்பொழுது விளக்கெதிரில் படுத்துக்கொண்டிருக்கிறாள். அழுது, அழுத களைப்பில் தாங்கி, விழிப்பு வந்ததும் மறுபடியும் அழுது அழுது முகமே வீங்கிவிட்டது.இந்தப் புது அநுபவம் அவளுக்குத் திகைப்பாக இருக்கிறது.

விளக்குச் சுடர் பொறி விடுகிறது.

'ஜனனீ, உனக்குச் சொல்லவேண்டியதும் உண்டா? நீ எல்லோருக்கும் பாலைக் கொடுப்பவளேயன்றி, குடிப்பவள் அல்ல; உலகில், தான் ஈன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/181&oldid=1496987" இலிருந்து மீள்விக்கப்பட்டது