ஜனனி 141
{[gap}}இந்தக் குழந்தையை யார் பெற்றதென்று நினைக்கிறாய்? நீ பெற்ற குழந்தைதான். நீயே விழுங்கப் பார்த்தால் அது உள்ளும் போகாமல் வெளியும் வராமல் தொண்டையில் மாட்டிக் கொண்டதும் எடுத்துவிட என்னைக் கூப்பிடுகிறாயா?"
'அம்மா!'
விளக்கு சிரித்தது.
"ஜனனி, அம்மா என்று யாரைக் கூப்பிடுகிறாய்?"
ஜனனி பூஜையறையினின்று வெளிப்பட்டாள். அவள் கண்கள் ஒளிவீசின. தன்னுள் தான் மூழ்கி, தன்னை மறந்து கைகளையும் கால்களையும் வீசியாடிக்கொண்டு, மகமாயிப் பாட்டுப் பாட ஆரம்பித்து விட்டாள்:
"தாயி மகமாயி தாயி மகமாயி
நெற்றிதனில் உள்ள முத்தை நேத்திரத்தில் இறக்கம்மா
நேரு மகமாயி நேரு மகமாயி
தேத்திரத்தில் உள்ள முத்தைத் தாடைதனில் இறக்கம்மா
தாயி மகமாயி தாயி மகமாயி
தாடைதனில் உள்ள முத்தைக் கழுத்துதனில் இறக்கம்மா
காளி மகமாயி காளி மகமாயி
கழுத்துதனில் உள்ன முத்தை மார்புதனில் இறக்கம்மா
மாரி மகமாயி மாரி மகமாயி
மார்புதனில் உள்ள முத்தை வயிறுதனில் இறக்கம்மா
வாரி மகமாயி வாரி மகமாயி
வயிறுதனில் உள்ள முத்தை தொடைதனிலே இறக்கம்மா
தாயி மகமாயி தாயி மகமாயி
தொடைதனிலேயுள்ள முத்தை முட்டிதனில் இறக்கம்மா
மூது மகமாயி மூது மகமாயி
முட்டிதனில் உள்ள முத்தைக் காலதனில் இறக்கம்மா