ஜனனி 143
'அடியே இப்படி அடங்காப்பிடாரியாய் இருக்கையே! உன் புக்ககத்துக்குப் போனால், உன் மாமியார் நீ" பண்ணற அட்டகாசத்துக்கு உன்னை இடிக்கறது. போறாதுன்னு, உன்னை யாருடி வளர்த்தான்னு என் பேரையும் சந்தியில் இழுப்பாடி!'
'உன்னை எந்த மாமியார் இப்போ இடிச்சுண்டிருக்கா அம்மா?’’
'உன் நாக்கைச் சுட்டெரிக்க என் மாதிரி நாலாவதாய் வாழ்க்கைப்பட்டால், மாமியார் மாத்திரமில்லே, புருஷன் கூட ரொம்ப நாள் தக்கமாட்டாண்டி!'
அம்மாள் சொன்னதற்குத் தகுந்தாற்போல், கிழவருக்கு உடம்பு வரவர ஒடுங்க ஆரம்பித்துவிட்டது. ஜனனியை எங்கேயாவது கையைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்னும் கவலை ஓங்க ஆரம்பித்துவிட்டது.
அம்மாளுக்கு ஜனனி வந்த ராசி எல்லாம் மறந்து விட்டது. 'வாசல்லே போற சனியனை விலைக்கு வாங்கினாப்போலே என்கிற பெரியவாள் வாக்கு சரியாப் போச்சு. நன்னாக் கட்டிண்டு அநுபவிங்கோ'
"அடியே, இன்னும் நாலு நாள் கழித்துப் போகும் என் உயிர் உன்னால் இப்பவே போயிடும்போலே இருக்கிறதே!'
'நீங்க நன்னா இருங்களேன். ஏன் ஆயுசிலேயும் பாதி கொடுக்கிறேன். நாலுபேர் நடுவுலே தாலிகட்டி, சாந்தி சீமந்தம் எல்லாம் பண்ணிப் பெத்து வளர்த்த குழந்தையைப் பண்ணிக்கிறத்துக்கே, ஆயிரம் ஜோஸ்யம் பார்த்து, அழகு பார்த்து, அந்தம் பார்த்து, தெரிஞ்சு விசாரிச்சு, தெரியாமெ விசாரிச்சுப் பண்ணிண்டுட்டு, அப்புறங்கூட அது சரியாயில்லே, இது சரியாயில்லேன்னு குத்தம்