ஜனனி 145
'என்னடி பைத்தியம் மாதிரி பேசறே? பணம் ஒட்ட வைக்காத பண்டங்கூட உண்டா? இரண்டாயிரத்துக்கு நாலாயிரமாத் தளர்த்தினால், வஜ்ரம் மாதிரி ஒட்டிக்கிறது!’
ஐயர் நாலுநாள் கல்யாணம் பண்ணி, பணத்தை வாரி இறைத்தார். சமையலுக்கோ சடங்குக்கோ உடையும் ஒவ்வொரு தேங்காயுடன் அம்மாளின் வசை வார்த்தை களும்வெடித்தன. இந்தப் பிராம்மணன் எந்தக் குடி பாழாப் போறதுன்னு நெனைசுண்டிருக்கான்? பிள்ளையில்லாச் சொத்தா இது?”
அவள் வார்த்தையைச் சட்டை செய்வார் யார்?
நான்கு நாள் கல்யாணத்திற்குப் பிறகு, ஐந்தாம் நாள் சாந்தி பண்ணி, பெண்ணைப் புக்ககத்துக்கு அனுப்புவதாக இருந்தது. ஆனால் மூன்றாம் நாள் இரவு மாப்பிள்ளைப் பையனுக்கு அவன் அதிகாரிகளிடமிருத்து, உடனே புறப்பட்டு வரும்படி ஒரு தந்தி வந்தது. பாலிகை கொட்டக்கூட நேரமில்லாமல், பையன் மறு வண்டிக்குப் புறப்பட்டுப் போய்விட்டான்.
அப்பொழுது தடைப்பட்ட சாந்தி, அப்படியும் இப்படியும் ஒத்திப் போய்க்கொண்டே வந்தது. மணமாகிப்போன பையன் மறுபடியும் வேறு எந்த விசேஷத்திற்குங்கூட வர முடியவில்லை. அவனை ஓர் இடமும் ஸ்திரமென்றில்லாமல், அதிகாரிகள் மாற்றி மாற்றி அம்மானை ஆடிக்கொண்டிருந்தார்கள். இரண்டு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம்...
ஜனனி இப்படித் தான் புக்ககம் போகாதபடி நேர்ந்த தடங்கலைப் பாராட்டினாளோ, இல்லையோ என அவள் வெளித்தோற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை. முன்னை விடப் பன்மடங்கு துடிப்பு மிடுக்குடன்தான் பொலிந்தாள்.
அ.-10