பக்கம்:அவள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xix



நீ குழந்தை
அறிவுக்கு முன்னாய நிர்மலம்
மாசறு பொன்
நீ தெய்வம்

குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்.

***

தெய்வம் என்று ஒன்றைத் தனியாகக் காண்போம், கண்டதைச் சொல்வோம் என்று எனக்குத் தோன்றவில்லை. இது தெரிந்துதான் அப்பவே கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்று விட்டனர்.

தெய்வம் இருக்கிறதோ இல்லையோ, தெய்வீகம் நிச்சயம் உண்டு.

தெய்வீகம் ஒரு அனுபவம். பிறவியின் உரிமை, ஆனால் எந்த சமயத்தில், எப்படி நேரும் என்று முன் கூட்டி அறிய முடியாதது. விசும்பினின்று 'விர்ர்'ரென்று இறங்கும் ராஜாளியின் சிறகு வீச்சு. ஒரே சமயத்தில் ஒருங்காய் பயம், த்ரில், கால்வாரல், ஆனந்தம். அது நேர்வதே, அதைத் தாங்கிக்கொள்ள அந்தப் பிறவிக்கு வந்திருக்கும் பக்குவ நிலையின் ஆடையாளம். அதன் நீடிப்பு ஒரு தருணம் மட்டுமே இருக்கலாம். ஆனால் தருணம் என்பது விதிப்பயன். நித்யத்வத்தினின்று உதிர்த்த கண்ணிர்த் துளி. அவள் மாலையிலிருந்து உதிர்ந்த ஸ்படிக மணி. அடியே பெருந்திரு! அம்மா என் தாயே! ஆனால் தருணம் நேர்வதற்கும் என்னை ஊடுருவுவதற்கும்கூட அவள் அருள் வேண்டும்.

தீயினுள் விரலை வைத்தால்
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா

என்றானே அதுதான் அது. அருள் அனுமானம், அனுபவம் மூன்றும் தனியறக் குழைந்துவிட்ட நிலைதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/19&oldid=1495892" இலிருந்து மீள்விக்கப்பட்டது