பக்கம்:அவள்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 லா. ச. ராமாமிருதம்



"ஜனனீ, ஜனனீ மாப்பிளே, மாப்பிளே!” கதவைப் படபடவெனத் தட்டுகிறார்கள் கதவைத் திறக்கக்கூடத் தோன்றவில்லை. நின்றபடி இருந்தாள்.

கதவை உடைத்துக்கொண்டு உள்ளே தள்ளிக் கொண்டு புகுந்தார்கள், அவனையும் அவளையும் கண்டு. பின்வாங்கினார்கள். கிட்டப் போகக்கூட அஞ்சியவர் களில் ஒருவன், தைரியம் கொண்டு, மாப்பிள்ளை மார்பில் கையையும், காதையும் வைத்துப் பார்த்தான். செத்துப் போனவனுக்குச் செத்தது தெரிந்திராது; அவ்வளவு விரைவில் பிராணன் போயிருந்தது.

"ஜனனீ என்னடி?”

ஜனனிக்குக் கண்களில் ஜலம் ஆறாய்ப் பெருகிற்று. ஆனால் பேச முடியவில்லை. வாய் அடைத்துவிட்டது.

'பலே! ஜனனீ!” என்று ஒரு வெறிக் குரல் அவளுள்ளே எழுந்தது.

"ஐயோ! ஜனனீ' என இன்னொன்று விக்கி விக்கி அழுத்து.

"ஜனனீ! ஜனனீ!”

அவள் திடுக்கென விழித்துக்கொண்டாள். இந்த நள்ளிரவின் மையிருளில் யார் அழைப்பது? அவளுள் எழுந்த வினாவிற்கு அக்குரல் உடனே பதிலளித்தது. "ஆம் ஜனனீ! உன்னை மீட்கத்தான் வந்தேன். ஆயினும் நீ நினைக்கும் மீட்சியல்ல. உன்னை உனக்கு உணர்த்த வந்தேன். நீ உணர்ந்தால் நீ மீள்வாய் ’’

ஜனனி திடீரென உணர்ந்தாள். நள்ளிரவில், மையிருளில், குழலினிமையில் வரும் இக்குரல், வெளியினின்று வராது, தன்னுள் இருந்துதான் வருகிறதென்று உணர்ந்தாள். இக்குரல் மெளனமாயும், அன்பாயும், அதே சமயத்தில் ஒர் அழுத்தத்துடனும் ஒலித்தது. எங்கேயோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/200&oldid=1496571" இலிருந்து மீள்விக்கப்பட்டது