இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாக்ஷாயினி
மூங்கில் பாலன்தின்மேல் மூவரின் கனம் அழுத்தியதும் பாலம் க்ரீச் க்ரீச்சென்று தொட்டிலாடிற்று. பாலம் ஆடவும் பையனுக்கு ஒரே குஷி. அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு தொப்புத் தொப்பெனக் குதித்தான். பாலம் ஐயோ ஐயோவெனச் செல்லமாய் ஒலமிட்டது.
'வா, வா போகலாம்.' 'இரு அம்மா செத்தே' என்று வர மறுத்துத் தும்பை இழுக்கும் கன்துக்குட்டி போல் அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
'நேரமாயிடுத்தே; அப்பா முன்னாலே போறாரே'
'அதெல்லாம் முடியாது, வரமுடியாது, போ” என்று பையன் தலையை ஆட்டி முரண்டி இன்னொரு முறை குதித்தான். அவனுக்கு ஏமாற்றம் நேராதபடி பாலமும் கத்திற்று.
"இதோ பாருங்களேன், உங்கள் பிள்ளை படுத்தற பாட்டை!’
நாலடி முன்னால் போய்க்கொண்டிருந்த அவள் கணவன் நின்று திரும்பி நோக்கினான். மாலையின் மஞ்சள் வெய்யிலில் பையன் பாலசூரியனாய்த் தகதகத்அ.-11