164 லா. ச. ராமாமிருதம்
"பிறருக்கு வரும் கடிதத்தைப் பிரிப்பதோ கேட்டு வாங்கிப் படிப்பதோ எனக்குப் பழக்கம் இல்லை."
- அப்போது நான் பிறத்தியாரா?”
அவன் பேசவில்லை. 'அப்போது உங்களுக்கு கடிதம் வந்தாலும் நான் என்ன என்று தெரிந்துகொள்ளக் கூடாதல்லவா?" எனக்குக் கடிதம் போட யார் இருக்கிறார்கள்? இனி எனக்கு வரவேண்டிய ஓலை ஒன்றுதான் பாக்கி. அது வந்ததும் அதற்குப் பதில் போட முடியாது. நானே இளம்பியாக வேண்டும்.' சரி சரி, உங்களோடு பேசினால், மூச்சு விடாமல் இப்படித்தான் தர்க்கம் பண்ணுவீர்கள். அவள் குரல் கடுகடுத்தது. வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் நாக்கில் நரம்பில்லாமல் வெடுக்கென அச்சானியமாய் ஏதாவது சொல்வீர்கள். உங்கள் உடம்பு இருக்கும் நிலைக்கு எனக்குத்தான் தாங்காது. அதனால் நானே தணிந்து போகிறேன்.” "நான் கிருதார்த்தனானேன். என் அகமுடையாள் எனக்குத் தணிந்து போகிறாள். என் ஜன்மம் சாபல்யம் அடைந்தது ' எனக்கு வந்தது. இதுதான், இந்தாருங்கள்!" கடிதத்தை மடியிலிருந்து எடுத்து அவனிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பிரித்தான். கண்கள் வரிகள் மேல் ஓடின. அது அச்சடித்த திருமண அழைப்பு. அதைக் கையில் பிடித்துக்கொண்டே திரும்பி, பாலத்தின் கட்டத்தின்மேல் சாய்ந்தான். இருவரும் மெளனமாய்க் கீழே ஒடும் ஜலஜரிகையைப் பார்த்துச் சித்தித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது வெய்யில், மழை வரட்டும்; கரை அடங்காது.