172 லா. ச. ராமாமிருதம்
'இல்லை. நாம் இப்பொழுது கண்ணால் கண்டது மாத்திரம் பேசவில்லை. கண் கண்டதால் நெஞ்சு கண்டது கண்டுகொண்டிருக்கிறோம். ஆகையால் உங்களிடம் நான் கண்டது. உங்கள் கண்களின் உக்கிரம் அல்ல, உங்கள் உள் தன்மையின் உக்கிரமே தான். அதை நீங்களும் உடனே நிரூபித்துவிட்டீர்கள்.”
'உன் தகப்பனாருக்கு உன்மேல் இருக்கும் பாசத்தில் அவர் உன் சங்கீதத்தைப்பற்றிச் சொன்னதெல்லாம் காதில் வாங்கிக்கொண்டேனே தவிர ஏற்றுக்கொள்ளவில்லை. இது தாமே நேருக்கு நேர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அல்லவா?’ என்றீர்கள்.
என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் சொன்னது அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அத்தோடு எடுத்தவுடன் நீங்கள் என்னை 'நீ' என்றதும் அவருக்குப் பிடிக்கவில்லை. எனக்கும் சங்கீதத்தைப்பற்றித் தெரியும்' என்றார்.
'நீங்கள் புன்னகை புரிந்தீர்கள். ஐந்து வயதில் நான் கோலியாடினபோது என் தகப்பனார் என்னைக் கன்னத்தில் அறைந்து இழுத்துவந்து சுவரோடு ஒட்டி வைத்துச் சொல்லிக் கொடுத்த நாளிலிருந்து சாதகம் பண்ணி வருகிறேன். எங்கள் குடும்பம் நினைவு தெரிந்த மூணு தலைமுறையாகச் சங்கீதப் பரம்பரை. அப்படி இருந்தும் சங்கீதத்தைப்பற்றித் தெரியும் என்று சொல்லிக்கொள்ளத் தைரியம் வரவில்லையே!”
'அப்பாவுக்கு இன்னும் ரோசம் வந்துவிட்டது. 'நான் சங்கீத சபைப்பிரஸிடெண்டு என்று தெரியுமோன்னா?”
"ஓஹோ அதனால்? திறப்பு விழாவில் கட்டடத்தின் கதவை கரகோஷங்களிடையே வெள்ளிச் சாவி போட்டுத்