தாக்ஷாயணி 173
திறந்தவர் கட்டடத்தைக் கல்மேல் கல் வைத்துக் கட்டினவர் ஆய்விடுவாரா? அல்லது உங்கள் தர்க்கப் பிரகாரம் ஆகிவிட வேணுமா?
அப்பாவுக்கு முகத்தில் ரத்தம் தெறித்தது. சடேரென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.
"என் வீட்டிலேயே என்னை அவமானப்படுத்த உம்மை இங்கு அழைத்து வரவில்லை!"
நீங்களும் விடவில்லை. உங்களுக்குப் பிடித்தமானதைப் பேசவும் நான் இங்கு வரவில்லை. நானாகவும் வரவில்லை. உங்கள் பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லித்தர வேண்டும் என்று நீங்களாக என்னைத் தேடிக் கேட்டு அழைத்து வந்தீர்கள் என்பதை உங்களுக்கு நினைவு மூட்டுகிறேன்.”
ஆமாம், சபா காரியதரிசி உங்களைப்பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்தார். நீங்கள் நாளடைவில் ரொம்பவும் பிரபலமாகப் போகும் பெரிய புள்ளி என்று இன்னும் ஏதேதோ சொன்னார். எனக்கும் என் பெண் எதிலும் சிறந்ததையே அடைய வேண்டும் என்னும் அவா உண்டு. அப்படி நான் ஒரு சபதமே பண்ணிக்கொண்டிருக்கிறேன். படிப்போ பாட்டோ புருஷனோ எதுவுமே, ஆம்
நானும் அதையேதான் சொல்கிறேன். உங்கள் பெண் மேல் இருக்கும் பாசம் உங்கள் கண்ணை மறைக்க முடியும்.'
அப்பா பதிலுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினார். அதுதான் சமயமென நான் இடை மறித்தேன். "ஆமாம், இவரை எனக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்க அழைத்து வந்தீர்களா? அல்லது செளகரியமாய்ச் சண்டை போடக் கூட்டி வந்தீர்களா?