பக்கம்:அவள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176 லா. ச. ராமாமிருதம்



சரியாய்ப் பேசினீர்கள்? நான் ஒருத்தருக்கும் பயப்பட்டதில்லை. ஆனால் உங்களிடத்தில் எனக்கு ஒரு பீதி கண்டது. அது இன்னமுந்தான் இருக்கிறது. உங்களிடம் ஒரு பிரஸ்ன்னம் இருக்கிறது.'

'நான் உன் அடிமை.”

"நான்தான் உங்களுக்கு அடிமையானேன். அன்று உங்கள் பாட்டிற்கு அடிமையாகி அதனால் உங்களுக்கு அடிமையாகிவிட்டேன். அன்று நீங்கள் சாமா பாடுகையில் கற்பனை ஸ்வரத்தில் மாமாமாமாமா என்று ஒரே அக்ஷரத்தை ஐந்து தடவை அழுத்தினீர்களே, அதில் ஏதோ ஒரு தருணத்தில், ஒரு 'மா'வில் உங்களுக்கு என்னை இழந்தேன். அன்று நீங்கள் மா...மா..." என்று எனக்கு என்ன செய்துவிட்டீர்கள், சொல்லுங்களேன்!”

"நான் என்ன செய்தேன்? உன் தகப்பனார் மாதிரி கேட்கிறாயே!'

'இல்லை, மாமாமாமாமா' என்று நீங்கள் உருக்கமாய் இழைக்கையில் திடீரென என் நெஞ்சுள் ஒரு கன்று அம்மா’ என்று கதறிற்று, அவ்வளவுதான்; உடனே எனக்கு என்னைச் சுற்றி அம்மா! அம்மா!' என்று ஒரேயடியாய் வெள்ளி மணிகளின் அலறல்தான் கேட்டது. தானே என் வசத்தில் இல்லை. என்னைச் சுற்றி ஒரே நீலமாகிவிட்டது. நீங்கள் நம்பினால் நம்புங்கள்; நம்பாவிட்டால் போங்கள். கண்ணை விழித்துக்கொண்டு தான் இருக்கிறேன். சொப்பனம் மாதிரி இருக்கிறது. ஆனால் நீங்கள் என் எதிரில் இல்லை. என் மடியில் குழந்தையாய்க் கிடந்தீர்கள். வெட்கம் வீட்டுச் சொல்கிறேன்.

"உனக்கும் எனக்குமிடையில் வெட்கம் என்பது கிடையாது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/220&oldid=1496389" இலிருந்து மீள்விக்கப்பட்டது