பக்கம்:அவள்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178 லா. ச. ராமாமிருதம்



எனக்கு ரொம்ப அசதியாயிருக்கே...' தம்பூரை அவசரமாய்க் கீழிே இறக்கிவிட்டுப் பரிவுடன் அவள் தலையை மடியில் எடுத்துக்கொண்டான். ‘வெகுநேரம் பேசிவிட்டாய். துரங்கு.” "இல்லை, எண்க்குத் தூக்கம் வரவில்லை. வராது. நீங்கள் தொடர்ந்து சொல்லுங்களேன்.” 'என்னது? 'நம் கதையை. உங்கள் வாய் மூலமும் நான் கேட்க இன்று எனக்கு ஆசையாக இருக்கிறது; இரண்டு குழந்தைகள் ஒன்றுக்கு ஒன்று கதை சொல்லி ஒன்றை ஒன்று தூங்கப் பண்ணிக் கொள்வதுபோல்." அவன் லேசாய்ச் சிரித்தான். அவள் குழந்தை மாதிரி அவனைத் தொந்தரவு பண்ணினாள். சொல்லுங்கோன்னா.'

அவள் மனம் இல்லாமல் இணங்குவதுபோல் பெருமூச்செறிந்தான்; பேசலானான்.

"அடுத்த நாள் மாலை நான் உங்கள் வீட்டுள் நுழைகையிலேயே, ஆபீஸ் அறையிலிருந்து உன் தகப்பனார் கூப்பிட்டார்.

"மிஸ்டர் பசுபதி, நான் திடீரென முடிவு செய்து விட்டேன். என் பெண்ணிற்கு டியூஷன் நிறுத்திவிடப் போகிறேன். இதோ உங்கள் சம்பளம்; மன்னிக்க வேண்டும்; சரி, போய் வருகிறீர்களா? எனக்கு வேலை இருக்கிறது."

"அவர் நடத்தை வெடுக்கென்று இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்டுக் கொள்ளவில்லை. ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுப் பேச்சை வளர்த்த எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/222&oldid=1496391" இலிருந்து மீள்விக்கப்பட்டது