184 லா. ச. ராமாமிருதம்
'நிமிஷத்தில் வருஷங்கள். வருஷத்தில் நிமிஷங்கள். காலகதியின் உண்மையான தன்மையில் நிமிஷத்துக்கும் வருஷத்துக்கும் விததியாசம் இல்லை
‘'நீ படித்திருப்பதால் நீ சொல்வதையெல்லாம் நிரூபிக்க முடியும். எனக்குத் தெரிந்தது கூட்டில் அடைபட்டாற்போல் இங்கு இருக்கிறேனே. இந்த எட்டு வருஷங்கள்தாம். எட்டு வருஷங்கள். ஒன்றா இரண்டா....?"
அவள் தலை குனிந்தாள். அவன் புறங்கையில் இரண்டு நெருப்புச் சொட்டுக்கள் விழுந்தன. அவன் மனம் பஸ்மம் போல் பிசுபிசுத்தது.
'தாக்ஷாயணி, ஏன் அழுகிறாய்?"
அவள் முகம் பயத்தில் மாறுவது நிலவில் கூடத் தெரிந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டாள்.
'நீங்கள் எதை நினைக்க வேண்டாம் என்று கவலைப் படுகிறேனோ, அதையேதான் இப்போது இருவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.'
"மனம் என்பது எப்பொழுதும் ஒரு நிலையில் இருப்பதில்லை. அது எண்ணுவதையெல்லாம் எண்ணியே தீரும்."
அவன் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
"என்னால் உங்களுக்கு ஒரு சுகம் கிடையாது. நான் படி மிதித்ததிலிருந்து உங்களுக்குக் கஷ்டத்தைத் தவிர வேறெதுவும் இல்லை."
"என் வியாதிக்கும் நீ படி மிதித்ததற்கும் சம்பந்தம் இல்லை. இது குடும்பத்தில் இரண்டு வழியிலும் இருக்கிறது. என் தாய் இறந்தது காசநோயால்தான். என் தாயைப் பெற்ற பாட்டனார் இறந்ததும் அதே வியாதியால்தான். என் தகப்பனாரோ தம் அத்தை