பக்கம்:அவள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



xxiii

நான் எப்படியோ, ஹைமவதிக்குக் குஷி தான் முகம் வெளிச்சம் போட்டிருக்கிறது. அது தவிர, தன் சந்தோஷத்தை மலிவாக அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவளுடைய பிறந்த வீட்டின். சொந்த ஊரின் பழைய நினைவுகளைப் பேசிக்கொண்டு...

ஹைமவதியிடம் சில விசேஷ குணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே தெரிந்தவைதான் என்றாலும், அலைகளின் உயரியத்தைப் புதிதாய் இப்போதுதான் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறேன் ஆத்மாவின் பிரயாணத்தில் இதுவும் ஒரு அம்சம் போலும்!

படு சுத்தம். A great letter-writen தினக்குறிப்பு (டையரி) எழுதுகிறாள். தான் உண்டு, தான் எழுதும் கடிதங்கள், டையரி உண்டு, தான் படிக்கும் புத்தகங்கள் உண்டு என்று பிறர் வழிக்குப் போகமாட்டாள். அவள் கடிதம் எழுதுகையில் முகத்தில் குழுமும் மனமுனைப்பில் (Concentration) ஒரு தினுசான அழகு, குழந்தைத் தனம், முகத்துக்கு வருகிறது. இப்பவே கொஞ்ச நாட்களாகக் கவனித்து வருகிறேன். தோற்றத்தில் ஒரு தினுசான தோரணை வந்திருக்கிறது.

அம்மாவும் பெண்ணும் அம்பத்தூரிலிருந்து மாம்பலம் "ஷாப்பிங்" கிளம்பும்போது, பெரியவள் தோளில் பையை மாட்டிக்கொண்டு (அதில் குடிதண்ணீர் பாட்டில்) 'டீக்'காக உடுத்திக்கொண்டு (சாதாரணப் புடவைதான் ) இருவரில் அவள் தான் 'ஸமார்ட்டாகத் தெரிகிறாள்.

ஹைமவதிக்கு லாழ்க்கையில் சுவாரஸ்யம் குன்றவில்லே. சுவாரஸ்யம் என்பது வயதில் இல்லை, மனநிலையென்று அவளிடம் தெரிகிறது. தன் புடவைகளை எத்தனை தடவைதான் எடுத்து எடுத்துப் பார்த்துப் பார்த்து மடித்து மடித்துப் பாலிதீன் பைகளில் போட்டு காத்ரெஜ்ஜில அடுக்குவாளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/23&oldid=1495937" இலிருந்து மீள்விக்கப்பட்டது