பக்கம்:அவள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமலி


கார் புறப்பட்டு வேகமெடுத்துத் தெருமுனையில் சத்தம் ஒய்வது கேட்டது.

அடுத்து அவள் உள்ளே வந்து 'அம்மாடி என்று பெருமூச்சு விட்டுக் கூடத்துத் திண்ணையில் சாய்ந்தாள்.

"ஒருவழியா அனுப்பியாச்சு? அவர் ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார்.

"ஆச்சு, தாஸு இப்பத்தான் போறான்.

” "உன்னைக்கூட அழைச்சான் போல இருக்கே, தன் வீட்டில் கொஞ்சநாள் தங்கும்படி!' அவர் குரலில் ஏளனம் சிந்திற்று.

சூள் கொட்டினாள். சேஷோமம் பண்ணின மாதிரி வீடு வீடாக மூணு நாளாகும். எல்லாம் போட்டது போட்டபடி-’

"ஆமாம், இருக்க வேண்டியதுதானே! பையன் எல்லாருமாச் சேர்ந்து நமக்குக் கலியாணம் பண்ணி வெச்சிருக்காங்களே!'

அவள் முகம் மலர்ந்தது. மஞ்சள் பூத்த நரைக் கூந்தலில் சிக்கிக்கொண்டிருந்த நேற்றைய பூச்சரத்தை இழுத்து அதைச் சற்று நேரம் நோக்கினாள். 'நமக்குக் கலியாணம் ஆகி அறுபது வருஷம் ஆறதுன்னா நம்ப முடியல்லே,”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/232&oldid=1496442" இலிருந்து மீள்விக்கப்பட்டது