அமலி 191
'வென்னீரடுப்பு மூட்டறேன். இதோவந்துட்டேன்!"
'இல்லை. நானே வரேன், சற்று விந்தியபடி பின் கட்டுக்குப் போனார்.
'அமலி, இன்னிக்கு எனக்குப் பூஜை பண்ற மாதிரியில்லை."
'அவ்வளவுதானே!"
"இல்லை அமலி, இன்னியிலிருந்தே முடியும்னு தோணல்லே. இந்தக் கலியான தினத்தைக் கொண்டாடினதிலே எனக்கு என் வயசையும், உடம்பலுப்பையும் ஞாபகப்படுத்தினதுதான் மிச்சம். இனிமேல் நீதான் பண்ணனும்.”
"பண்ணினாப் போச்சு. நீங்கள் பூவை ஒண்னொன்னா சொல்லிப் போடறதை நான் ஒண்னும் சொல்லாமல் அள்ளிப் போடுவேன். நீங்கள் நைவேத்யமாப் பண்றதை நான் வெறுமென எதிரேவெச்சு, கையைக் காட்டிக் காக்காய்க்குப் போடுவேன். எல்லாமே செஞ்சவரைக்கும்தான். இந்த அறுபது வருஷம் விடாமே பண்ணினேளே; அதை அவள் தெரியாதவளா?” '
பண்ணி என்னத்தைக் கண்டோம்?’
'ஏன் அலுத்துக்கறேள்? பிள்ளைகள் மூணுபேரும் மூணு அர்ஜுனா. பெண்கள் ரெண்டுபேரும் நல்லபடியா வாழறா. இன்னும் நமக்கு என்ன வேணும்? இந்த மூணு நாளும் பழைய மாதிரி குடும்பம் சேர்ந்து இருந்து, இன்னியோட அவாளவாள் திரும்பிப் போயிட்டாளேன்னு நினைச்சுப் பார்த்தால், சிரமமாத்தானிருக்கு."
"இந்த மூணு நாளும் நிர்த்துாளி. பேரப் பிள்ளைகளா, வானரங்களா?”
'அப்படிச் சொல்லாதேங்கோ. குழந்தைகள் பின்னே எப்படியிருக்கும்? அப்படித்தானிருக்கும்.'