அமலி 193
"அப்படி என்ன கேட்டுடுவாள்?"
"சொல்லட்டுமா? உங்கள் பிள்ளைக்கு ஆண்மையில்லை
என்ன சொன்னேள்?"
அமலி எழுந்து நின்றாள். அடுப்பில் கொள்ளிக் கட்டை சரிந்தது.
"பொறு பொறு, ரத்தம் கொதிக்காதே! நான் சொல்லல்லே. அவள் சொல்வாள்னு சொன்னேன்! பெண்ணைத்தான் தள்ளி வெக்கறதைக் கேள்விப்பட்டிருக்கோம். ஆனால் ஆண்களைத் தள்ளிவெக்கற காலமும் வந்துடுத்து-என்ன பொக்கைவாய்ச் சிரிப்பு?’
இல்லை, கேள்விப்பட்டிருக்கோம்னு சொன்னேளே அதுக்குச் சிரிப்பு வந்தது."
'அதில் என்ன சிரிப்பு?’’
'ஏன், இந்த வீட்டிலேயே நடக்கல்வியா?"
இருவருமே சட்டென மெளனமானார்கள். ஒட்டுக் கூரைமேல் ஒரு காகம் உட்கார்ந்து கரைந்து உடனே பதிந்தது.
சொல்லிக் காண்பிக்கணும்னு எண்ணமில்லே. சொன்னத்துக்கு நினைப்பு வந்தது. பேசிட்டேன், கோவமா?"
அவர் பேசவில்லை. வாசற்படியில் தயங்கி நின்றார். முகம் வாடிவிட்டது.
"நாம் பிரிஞ்சிருந்தது முனு வருஷம்தான். ஆனால் அது வீண்தானே? அதுவும் கலியாணமான புதுசு. சரியான காரணமுமில்லே.' 'காரணம் நான் இல்லை அமலி!'அ.-13