198 லா. ச. ராமாமிருதம்
சின்னச் சின்ன ஓசைகள்கூடப் புஷ்டியான அர்த்தம். பிதுங்கும் இரவின் நிசப்தம். ரேழித் திண்ணையில், தலைக்கு நேர்விட்டத்தில் பட்சிக்கூண்டில் சிறகுகளின் படபடப்பு. அவை ஏன் தூங்கவில்லை. அங்கேயும் கலவரமா? இவ்வுலகமே பிரம்மாண்டமான கூண்டு. ஜந்துக்கள் மூலைக்கு மூலை ஒடுகின்றன. நாம் ஜந்துக்கள் இல்லாமல் பின் என்ன? நட்சத்திரங்களைப் பார்த்து ஏங்குகிறோம். அவை நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றன.
'அமலி, தூங்கிட்டையா?”
"என்ன வேணும்?”
"இன்னிக்கு மூணாம் மாஸம் எனக்கு 8-வது ஜன்ம நட்சத்திரம்." -
"அப்படின்னா சதாபிஷேகம் கிட்ட வந்துடுத்துன்னு சொல்லுங்கோ. நமஸ்காரம் பண்றேன்.'
'உன் நமஸ்காரம் கிடக்கட்டும். நீ கோட்டை கட்டிண்டிருக்காதே. அடுத்தடுத்துப் புடவையும் வேட்டியும் குட்டி போடும்னு." ' போடாட்டா போறது. பிள்ளைகளுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை."
'இதுலே வைதிக காரியங்களை ஏனோ தானோன்னு விட முடியாது. மாங்கல்யம் பண்ணியாகணும். இவா தான் எல்லாம் செய்யனும்.”
"செய்யமாட்டாளா என்ன?”
'எனக்கு நம்பிக்கையில்லை.”
"அவாளுக்குத் தெரியப்படுத்துவது தம் கடமை."
'உனக்கு எங்கே சபலம் விடறது?’’
'செய்யாட்டாப் போறா; நம்மால் எதுவுமே முடியாட்டா எதிரேயே பெருமாள் கோவிலில் மஞ்சள் கயிறில் மஞ்சளைக் கோர்த்து, சன்னதியில் எனக்குக் கட்டிடுங்கோ யதேஷ்டம்.'