பக்கம்:அவள்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமலி 201

கூடவே ஒரு வண்டின் கூவல் எங்கிருந்தோ கிளம்பிற்று. இருட்டில் சுற்றிச் சுற்றி வட்டமிட்டது. ஒரு தடவை முகத்திலும் மோதிற்று. கொட்டினால் அவ்வளவு தான். அவள் கைமேல் அவர் பிடி கொஞ்சம் இறுகிற்று. எங்கோ இருட்டில் வழி தப்பி வந்திருக்கிறது. அரைக் கணம் பயத்தில் செயலிழந்தார். அப்பவே அவர் பிடியிலிருந்து அவள் கை நழுவித் துவண்டு விழுந்தது.

"அமலி! அமலி!!"

பதில் இல்லை.

எழுந்து குனிந்து அவள் தோளை உலுக்கினார். "அமலி!”

ஊஹூம்

ஸ்விச்சைப் போட்டார். விளக்கு வரவில்லை. மின்சாரம் ஃபட்

'அமலி! அமலீ!!"

அந்த அலறலில் மிரண்டு வண்டின் ரீங்காரம் ஜன்னல் வழி வெளியே சென்றுவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/245&oldid=1497146" இலிருந்து மீள்விக்கப்பட்டது