xxv
என்று தனக்குத்தானே சமாதானமாகும் சமயத்தில், வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றி விட்டது. வாங்கி வந்ததும் என்ன சந்தோஷம்: "நீயும் கோவிலுக்கு வரும்போது இதைக் கட்டிக்கொள்" என்றேன். சற்று தயங்கிவிட்டு,
"மாட்டேன் அம்பாளோடு போட்டியா? அபராதம், அபராதம்!" தவடைகளில் ஒரு கையில் மாறி மாறித் தட்டிக்கொண்டாள்.
இது பக்தியா, பயமா, குழந்தைத்தனமா? மூட நம்பிக்கையா?
அபிஷேக தினத்தன்று வேறு ஏதோ பட்டா, பனாரஸ்ஸா? அறியேன். ஒன்பது கஜம் கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டு வந்தாள். 'ஜம்'மென்று இருந்தாள். லேசான கம்பீரம் தானே வந்துவிட்டது.
அம்பாளின் அபிஷேகம் பார்க்க, கர்ப்பக்ருஹத்தில் அம்பாளுக்கு வெகு அருகாமையில் நிற்க, குருக்கள் அழைத்தார். வர மறுத்துவிட்டாள். கர்ப்பக்ருஹத்துக்கு வெளியே கிராதி போட்டிருக்கும் இடத்துக்கு வந்து தரையில் உட்கார்ந்துவிட்டாள். அவளுக்குள் ஏதோ நடைமுறை (Code of Conduct) வைத் திருக்கிறாள்.
***
மதுரையில் நாங்கள் தங்கியிருந்த ஒட்டல் அறைக்குத் திருமதி பாதிமா அன்று மாலை தன் கணவருடன் வநதாள.
திருமதி பாதிமா ஜேஸுமணி 'லா ச. ராவின் சிறு கதைகள்-ஆக்கமும் உருவும்' (அல்லது இது போன்ற) தலைப்பில் Ph. D ஆய்வுரை எழுதியிருக்கிறாள். தேர்வுக் குழுவுக்கு ஆய்வுரை போயிருக்கிறது. என் பார்வைக்கு அதைக் கொண்டு வந்தாள். பைண்டு பண்ணி திண்டு மாதிரி புத்தகம்.