212 லா. ச. ராமாமிருதம்
***
சிற் சில சமயம் எனக்குச் செவி நரம்பு குறுகுறுக்கும். செவியென்று நான் சொல்கையில் என் மனத்தில் என் எண்ணம், வெளிச்செவிக்கும் உட்செவி தாண்டிய,கட்செவிக்கும் உட்செவி, அங்குச் சிலந்தி நூலினும் இழையெடுத்த ஸ்ன்னத்தில் எஃகுச் சுருள் ஒன்று திடீர் திடீர் என எனக்குக் காரணம் தெரியாத சமயங்களில் சுழல் கையில், அந் நரம்பொலியில் சிரிப்பு கேட்கிறது. எனக்கு மாத்திரம் கேட்டு என்னில் குடிகொண்ட ரகஸ்யச் சிரிப்பு? என்ன சிரிப்பு? என்னையறியாமல் இது என்னுள் எப்போது வந்தது? இல்லை. எனக்கு முன்னாலேயே இருந்து என் தோலும் சதையும்-தான் அதன்மேல் புற்று மண்ணாய்ப் பூத்துக் கொண்டிருக்கிறதே? இச்சிரிப்புக்குச் செலவு உண்டோ இல்லையோ வற்றல் இல்லை.
உயிர் அருவியின் 'கிளுகிளுப்பே' இதுதானோ?
ஆனைக்கா ஸன்னதிபோல், நெஞ்சப்பாளங்களிலிருந்து கசியும் கண்ணீரும் இதுதான் என்றும் தோன்றுகிறது. ஏனெனில் நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால் குளிர்ந்த கோபம்தான் கண்ணீர். உறைந்த கண்ணீர்தான் சிரிப்பு.
ஆகையால் எப்பவும் அழுவதற்குப் பதில்தான் சிரிப்பு.
சிரிப்பைப்பற்றி நான் வேணது அறிவேன்.
ஒருநாள் மாலை நான் ஆபீஸிலிருந்து திரும்பி வரும் வழியில் தெருக் குழாய்ச் சண்டை.
வசை மொழியில் ஆண் ஒருநாளும் பெண்ணை மிஞ்ச முடியாது, திண்ணமாய்ச் சொல்வேன். வசவின்