பக்கம்:அவள்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 217


கொண்டு வரணும்னு ஆசையிருக்காதா? ஏதோ அவனும் சொக்காய்த்துணி வண்னான் வரைக்குமாவது ஆகுமோன்னோ!

ராஜு என்றுமே 'டீக்'காக உடுப்பான், வண்ணான் மடியில் கத்திமுனை கலையவே கலையாது. தூசி பட்டாலும் துடித்து விழுவான். ஆகையால், இப்போது சட்டைப்பையில் கறுப்புத் திட்டு தீய்ந்துகொண்டே பெரிதாகி, சொக்காய் பொசுங்குவது அவனுக்கு ஏன் தெரியவில்லை? நான் சட்டென்று அவன் பைக்குள் கைவிட்டு எடுத்து அவன் வாயில் நட்டேன்.

"ஏண்டா, அப்பாவுக்கு இப்படி மரியாதை பார்த்தால் உன் உயிருக்கே ஆபத்தாச்சேடா! சட்டை பற்றிக்கொண்டால் உன் கதி என்ன?"

அவன் கன்னத்தில் விழுந்த அறையில் என் கைவிரல் நுனிகளில் 'சுறீல்' பாய்ந்தது.

ராஜு திணறிப் போனான். அவனுக்கு வலியைவிட ஆச்சரியம்தான் இருந்திருக்கும். எனக்கே என் செயல் வியப்பாயிருந்தது. எனக்கு நினைவு தெரிந்து என் குழந்தைகளை நான் தண்டித்தது இல்லை. அதெல்லாம் அவள்பாடு. அடிப்பாள், உடனே கட்டிக்கொண்டு அழுவாள். அடித்த கன்னத்தைக் கையில் தாங்கிக் கொண்டு என்னைப் பார்த்துக் குழம்பி நின்றாள்.

"என்ன இது வயசுப் பிள்ளையை நீங்கள் போட்டு அடிக்கற அக்ரமம்?" குரல் கேட்டுத் திரும்பினேன். என் பின்னால் ராதை நின்று கொண்டிருந்தாள்; அவள் முகம் கொதித்தது. இந்தச் சமயம் அவள் தன் முந்திய அழகின் முழுமையில் பொலிந்தாள். எனக்குச் சொந்தமாயிருந்த அந்த நாளின் அழகு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/261&oldid=1497314" இலிருந்து மீள்விக்கப்பட்டது