பக்கம்:அவள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224 லா. ச. ராமாமிருதம்


எப்போ சான்ஸ் கிடைக்கிறது? அடடா பிடிடா இவளை! மசியைக் கொட்டிட்டாளே. முக்கியமான பேப்பரில்!"

"அப்பா, சாயந்தரமா வரப்போ "லாலிபப்" வாங்கிண்டு வரியா?

***

என் அறையில் படுத்திருக்கிறேன். அறை மிகச் சிறிது. கைகளை நீட்டினால் இரு பக்கத்துச் சுவர்களும் இடிக்கின்றன. ஆயினும் இது என் வளை. ஜன்னலில் ஒரு மண் கூஜாவில் குடி ஜலம், கண்ணாடி டம்ளர். இன்றுதான் வாங்கினேன். காலை வீசி நடக்கும் தூரத்தில் Hotel de Mathur பண்டங்கள் அப்படி ஒன்றும் மதுரமாயில்லை. ஆயினும் கிட்ட இருக்கிறது. சாப்பிடப் போனாலும் போச்சு. சோம்பலாய் இருந்தால் திரும்பிப் படுத்துக்கொண்டாலும் போச்சு. என்னைக் கேட்பார் யாருமில்லை. நானே ராஜா, நானே மந்திரி, நானே சேவகன்.

ராதையின் பழகிய குரல் நினைவில் எழுகின்றது.

"எத்தனை நாள் நடக்கும் பார்த்துடறேன். நாக்குச் செத்துப்போனால் தானா வந்து சேர்றார். அவர் வீட்டுக்கு அவரை நான் அழைக்கனுமா என்ன? நாலு பேர் சிரிக்கணும்னுதானே நாலு பெக்கற வரைக்கும் காத்திருந்து உங்கப்பா லீலை நடத்தறார்!"

அதுவும் எனக்குத் தெரியாது. இப்போதைக்கு என் சிரிப்புத்தான் எனக்குக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஆனால் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.

குழந்தைகள் வருமுன் என் ராதை ஒரு சமயம் எங்கள் ஆலிங்கனத்தின் நெருக்கத்தைத் தடுத்ததென என் பூணுாலைக் கோபித்து "சூள்' கொட்டி முதுகுப்புறம் தள்ளிவிட்டதும் ஞாபகம் வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/268&oldid=1497455" இலிருந்து மீள்விக்கப்பட்டது