த்வனி 227
***
அவள் கணவனும் இரண்டு நாள் கழித்து என்னைப் பார்க்க வந்தான். பையனை அழைத்துக்கொண்டு "சுமாச்சுமா சேகர் பிடுங்கி எடுக்கிறான்". அவனுக்கு ராணுவத்தில் வேலை."நினைத்த சமயம் எங்கே வேணு மானாலும் மாற்றலாம். பையன் படிப்பு பாழாய்ப் போவுது. பையன் உங்ககிட்ட ரொம்ப ஒட்டிக்கிட்டான் சார், எங்களுக்கே ஆச்சரியமா இருக்குது."
யாரும் என்னோடு ஒட்டினால் இப்போது கூச்சமா யிருக்கிறது. எந்தவித ஈடுபாட்டிலும் மாட்டிக்கொள்ள மனம் மருள்கின்றது. இப்போது ஒரு பெரும் ஈடுபாடி லிருந்து என்னைக் கழற்றிக்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் இதை இவனிடம் சொல்ல முடியுமா? சொல்வதே ஒரு ஈடுபாடுதான்.
"அவளுக்கு ரொம்ப சந்தோஷம் சார், so to me. எங்க வீட்டில் பெரியவங்க யாரும் இல்லை. என் parents சின்ன போதிலேயே காலமாயிட்டாங்க. அவளுக்குத் தாயார் இல்லை. அவள் தகப்பனார் மறுபடியும் கலியாணம் பண்ணிக்கிட்டார். அலங்க எல்லாம் தூர தேசம்-"
கண்டவிடம் மாற்றலாகி, கண்டபேருடன் பழகி அவர்கள் பேச்சு இவனுக்குப் படிந்து, இவன் பாஷை இன்னதெனப் புரியாதபடி பாழ்பண்ணிக் கொண்டாச்சு.
இதையெல்லாம் இவன் ஏன் என்னிடம் சொல்கிறான்? இவர்களைப்பற்றி எதையும் அறிய நான் விரும்பவில்லை. யாரைப் பற்றியும் எதையும் அறிய நான் விரும்பவில்லை.
"உங்க மாதிரி ஒரு பெரியவங்க எதிர் வீட்டிலேயே எங்களுக்குக் கிடைச்சுது எங்க அதிர்ஷ்டம் ஸார். அப்பப்போ advice, guidence-”