பக்கம்:அவள்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 239


ராதை எச்சரித்தது அப்போ சரிதானா?

"பணம் ஏதாவது முடையா?" என்று கேட்டேன்.

"No, no, no!" அவன் சிரிப்பின் அழுகையிலும் துக்கம் தொனித்தது.

" I am sorry."

"நான் இப்போ மாறிப்போற இடமும் காயமில்லை. மறுபடியும் நாலு மாதத்துக்கொல்லாம் துரக்கிடுவாங்க. இந்தக் குருவிக்காரன் புளைப்பிலே இவளையும் பையனையும் கூட எப்படிக் கட்டி இளுத்துக்கிட்டுப் போறது? இவளைப் பிறந்த வீட்டுலே விட்டுடப்போறேன்". நான் ஒன்றும் பேசவில்லை. நான் பேச என்ன இருக்கிறது?

"அதுவும் துாரதேசமாப் போச்சு. அவருக்கு Second wife. அந்தக் குழந்தை குட்டி வேறே. அதனாலே அவங்களையும் நான் குத்தம் சொல்ல முடியாது. ரொம்ப நாளா touch விட்டுப்போச்சு இல்லையா? இருந்தாலும் எனக்கு வேறே வழி என்ன இருக்குது? சொல்லுங்க."

சற்று நேரம் எங்களிடையில் பேச்சு எழவில்லை. நான் காத்திருந்தென்.

"ஸார், கலியாணி மூணு மாதமா ஸ்னானம் பண்ணல்லே.”

பிறகு வார்த்தைகள் மளமளவெனக் கொட்டின.

"எனக்கு இதுதான் பெரிய Worry. முதல் பிரசவமே ரொம்பக் கஷ்டமாப் போச்சு, வவுத்தைக் கிழிச்சுதான் எடுத்தாங்க. அப்பவே வீக்காப் போயிட்டா. Complications வேறே. புளைச்சதே புனர் ஜன்மம். மறுபடியும் கருத்தரிச்சு அதுவும் ஸீஸரியன் ஆச்சுண்ணா ஆளுக்கே டேஞ்சர்னு doctors சொல்லிட்டாங்க. என் wife பாக்கறதுக்கு என்னவோ ஆளாயிருக்கா. ஆனால் ரொம்ப Weak. இதோ அவளைக் கொண்டுபோய் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/283&oldid=1497551" இலிருந்து மீள்விக்கப்பட்டது