த்வனி 241
"---"
"ஞாபகம் வெச்சிக்கோங்க, போய்ச் சேர்ந்ததும் எழுதறேன்."
"அவசியமாய்" என்றேன், சேகர் முதுகைத் தட்டிக்கொண்டே. ஏதோ இவன் கடிதத்திற்கு நாள் தவறாமல பதில் போட்டு விடுகிறாப்போல்.
சேகருக்கு என் நினைப்பு அதிகம் இருப்பதாய்த் தெரியல்லே. அவன் இப்போது ரயில் சந்தோஷத்திலிருந்தான்.
அவள் ஒன்றும் பேசவில்லை. என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதைக் காட்டிலும் வெளுப்பாய் விளக்கு வெளிச்சத்தில் காட்டிய அவள் நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, பேசத் தவிக்கும் வாய் போன்று தன் உயிர் கொண்டு திகழ்ந்தது.
வண்டி நகர்ந்தது. கூட நான் நடந்தேன்.
திடீரென அவ்விழிகளினின்று கண்ணீர் புரண்டது. அதன் உதிர்களைத் துடைக்கக்கூட முற்படவில்லை. அவளிடம் செயல் இல்லை.
"இவ்வளவு இளகின மனதாயிருந்தால் உலகில் எப்படி வளைய வரது? அவளைத் தேற்றும் முறையில் கேலி பண்ணினேன். பார்க்கப் போனால் நம் பழக்கம் இந்த மூனு மாஸமாத்தானே! இத்தனைக் கண்ணீரும் எனக்கா?"
"இல்லை. உங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் அம்மா நினைப்பு வரது. அவளுக்காகவும் கூட என்று வெச்சிக்கோங்களேன்."
"ஏன் உன் தாயார் என் முகஜாடையாயிருப்பாளா?”
அ - 18