பக்கம்:அவள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 347


"நீ என்னோடு பேசலாம், என்னைப் பார்க்கலாகாதா?"

"நான் உங்களைப் பார்க்காதிருக்கிறேனே!"

"நான் உன்னைப் பார்க்கலாகாதா?"

"நான் அந்தக் கட்டத்தை விரும்பவில்லை."

"ஏன்?"

"பார்த்த முகமே புளித்த முகம்தான்."

"நான் இன்னும் உன்னைப் பார்த்ததில்லையே!"

"ஒரு தரம் பார்த்தாலும், பார்த்தபின், பார்த்த முகம்தானே! கண்டதைக் கண்டபின், அப்படிக் கண்டதாலேயே அதைக் காணாத முன் கற்பனையில் விளங்கிக் கொண்டிருந்த அதன் கற்பு நிலை சிதைந்துவிடுகிறது என்று சொல்வேன். ஆகையால் நீங்கள் என்னைப் பார்க்க நான் விடப்போவதில்லை."

"இது ஒரு அனாவசியமான சீண்டல் இல்லையா?”

"உங்களுக்கு அப்படிப் படலாம். ஆனால் என் அரூபத்தை என்னால் இப்படித்தான் சாதிக்க முடியும்சரி இன்று இது போதும். நாளை பேசுவோம்."

நான் படபடவெனத் தட்டினேன். ஆனால் தொடர்பு அறுந்தாகி விட்டது.

யார் இவள்?

நாளை பேசுவாளா?

***

இன்று மாலை நாலரை மணியிலிருந்தே இருப்புக் கொள்ளவில்லை. என் வேலைகளைச் சுருக்கவே முடித்துக் கொண்டு விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/291&oldid=1497614" இலிருந்து மீள்விக்கப்பட்டது