பக்கம்:அவள்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258லா. ச. ராமாமிருதம்



வெகு காலம் பூஜையில் இருந்து, நிறைய உச்சாடனங்கள் ஏறிய நிலையிலிருந்துதான் விக்ரஹம் வந்திருக்கிறது. அதில் சந்தேகமேயில்லை. இல்லையேல் எங்கிருந்து இத்தனை சக்தி இதற்கு எதிரில் என்னுடைய ஆராதனை எம்மட்டு! ஃபைலில் மறுபடி கவனத்தைத் திருப்புவார்; என்ன ஆச்சரியம். அதன் சிக்கல் கலைந்து, தெளிவான முடிவு தோன்றும். அதைக் காட்டவேதான் வந்தாளோ? அப்படித் தோன்றுகையிலேயே, ஒரு பரவசம், அடுத்து சன்னதி பயம்.

நள்ளிரவில் அழைப்பு விடுத்தாற்போன்ற உணர்வில் விழிப்பு வரும். -

பக்கத்தில் ரேணு முனகிப் புரள்வாள். சில சமயங்களில் தூக்கத்தில் வீறிடுவாள்.

அடுத்த நாள் ரேணு. என்ன துர் சொப்பனம் உனக்கு? என்று விசாரித்தால், எனக்கு ஒன்றும் நினைப்பு இல்லையே' என்று விழிப்பாள். 'வீறிட்டுக் கத்தினேனா என்ன' என்று சிரித்து மழுப்புவாள்.

ரேணு சோம்பேறி. ஆனால் அழகி. அந்த ஜாலத்தில் தான் இவள்போன்ற பெண்கள் காலம் தள்ள வேண்டும். அதற்கு ரேணுவுக்கு இங்கு கஷ்டமில்லை. ஒரு மாமியார், இரண்டு நாத்தனார்மார்கள், நாலு ஒர்ப்படிகள் சேர்ந்த கூட்டுக்குடும்பத்தில் இவள் நிலை எப்படியிருக்குமோ? ஆனால் இதெல்லாம் உதவாத, ஒவ்வாத யோசனை. விட்டுத்தள்ளு.

குத்துவிளக்கை ஏற்றி பாஸ்கர் அமர்ந்துவிடுவார். எந்தக் கோயில் அல்லது மடத்தினின்று கழன்று வந்திருப்பாள் காவிரியில் அகப்பட்டமையால் இவள் பூர்வோத்திரம், இந்த வட்டாரம்தான் என்று கொள்ள முடியுமா? இவள் பிரயாணம் இமயத்தில் ஆரம்பித்து, விந்தியம் தாண்டி ஏன் வந்திருக்க முடியாது? அதுவும் எத்தனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/302&oldid=1497845" இலிருந்து மீள்விக்கப்பட்டது